அத்துரலிய தேரரின் உரையின்போது இடையூறு விளைவித்த ஐக்கிய தேசிய முன்னணியினர்

Published By: Vishnu

29 Nov, 2018 | 06:02 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

இடைக்கால அரசாங்கம் அமைத்து இரண்டு கட்சிகளுக்கும் அதிகாரங்களை பகிர்ந்துகொண்டு தேர்தலுக்கு செல்லவேண்டும் என்ற  பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரின் கருத்துக்கு பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் சபையில் கூச்சலிட்டு கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

அரசியல் நெருக்கடி தொடர்பில் இன்று பாராளுமன்ற அமர்வில் ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், உரையாற்றும்போது, ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் அந்த கருத்துக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மேசையில் அடித்து கூச்சலிட்டனர். 

இதன்போது சபையில் ஆரம்ப வரிசையில் இருந்த மனோ கணேசன், ராஜித்த சேனாரத்ன மற்றும் சிலர் அவர்களை அமைதிப்படுத்தி தேரருக்கு தொடர்ந்து உரையாற்ற நடவடிக்கை எடுத்தனர். 

அத்துடன் தேரர் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட சிங்கப்பூர் ஒப்பந்தத்தின் சில உள்ளடக்கங்களை தெரிவித்தபோது, ஐக்கிய தேசிய கட்சி சுஜீவ சேனசிங்க, ஹர்ஷடி சில்வா போன்றவர்கள் பொய் சொல்லவேண்டாம் என தெரிவித்து தொடர்ந்து தேரரின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40