ரஷ்யாவுடன் போரில் ஈடுபடத் தயார் : உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு

Published By: Daya

29 Nov, 2018 | 03:05 PM
image

ரஷ்யாவுடன் முழு போரில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

கடந்த காலத்தில் ரஷ்யாவை ஒட்டி இருந்த பல நாடுகள் சோவியத் யூனியன் என்ற பெயரில் ரஷியாவுடன் இணைந்து ஒரே நாடாக இருந்தன.

 பின்னர் அந்த நாடுகள் ரஷ்யாவுடன் இருந்து பிரிந்து சென்று விட்டன. அதில், முக்கிய நாடான உக்ரைன் பிரிந்து சென்ற பிறகு இருநாடுகளும் பகை நாடுகளாக மாறி விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யா வலுக்கட்டாயமாக கைப்பற்றி தன்னுடன் இணைத்து கொண்டது.

அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு  அதிகரித்தது.

இந்நிலையில் ரஷ்ய கடல் பகுதியில் சென்ற உக்ரைனின் 4 கப்பல்களை ரஷ்யா சிறை பிடித்துள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் வரலாம் என்ற சூழ்நிலை நிலவுகிற நிலையில் உக்ரைன் தனது படைகளை எல்லையில் குவித்து வருகிறது.

பதிலுக்கு ரஷ்யாவும் எல்லையில் அதிக ஆயுதங்களை குவித்து வருகிறது. போர் பதற்றம் நிலவுவதால் உக்ரைனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி புரோசென்கோ தெரிவித்ததாவது,

 உக்ரைன் கடுமையான மிரட்டலுக்குள்ளாகி இருக்கிறது. தற்போது நடக்கும் நிகழ்வுகள் விளையாட்டுத்தனமான வி‌டயம் அல்ல ரஷ்யா தாக்குதலுக்கு தயாராகி உள்ளது.

எனவே, ரஷ்யாவுடன் நாங்கள் முழு போரில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு உதவும் வகையில் நேட்டோ நாடுகள் தங்கள் நாட்டுக்கு  கப்பல்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 ரஷ்ய ஜனாதிபதி புதின் தெரிவிக்கையில், 

உக்ரைனுடன் மோதும் எண்ணம் எங்களுக்கு இல்லை. உக்ரைனில் நடக்கும் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக அந்த நாட்டு ஜனாதிபதி அச்சுறுத்தி இருப்பதாகவும், போர் நடக்க போகிறது என தெரிவித்து நாடகம் ஆடுகிறார் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52