பாராளுமன்றத்தில் ரவி கருணாநாயக்கவினால் இன்று கொண்டுவரப்பட்ட பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, பாராளுமன்றம் நாளை வெள்ளிக்கிழமை (30-11-2018) காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். 

இதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சார்பில் எவரும் பங்கேற்கவில்லை என்பதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் அத்துரலிய ரத்தின தேரர் ஆகியோர் பாராளுமன்றில் விசேட உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.