புத்துயிர் பெறும் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறை 

Published By: R. Kalaichelvan

29 Nov, 2018 | 10:39 AM
image

இலங்கையின் பிரதான இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறை நிறுவனமான இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம்(SLGJA),தற்போது புதிய நிர்வாக சபை ஒன்றை நிறுவியுள்ளது. இத்துறையில் தேர்ச்சி பெற்ற பலரும் அந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். 

தொழிற்துறையின் மிக முக்கிய நிகழ்வான FACETS  இந்தக் குழுவினால் நடத்தப்படவுள்ளது. 

அது தொடர்பான அறிவிப்பும் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் 2003 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 

இலங்கை ஆபரண மற்றும் இரத்தினக்கல் வர்த்தகர்கள் சம்மேளனம் (1970 இல் ஆரம்பிக்கப்பட்டது) மற்றும் இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்கள் சங்கம் (1975 இல் ஆரம்பிக்கப்பட்டது) ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றிணைத்து இது ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் ஆபரண உற்பத்தி ஏற்றுமதி மற்றும் இரத்தினக்கல் பட்டை தீட்டுவோர் சங்கமும் இதில் இணைந்து கொண்டுள்ளன.

இந்த விடயம் பற்றிக் கருத்து வெளியிட்ட இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சங்கத்திற்கு,புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் அஹ்ஷான் றிபாய்,‘சர்வதேசத் தொடர்புகளை அதிகரித்து இது போன்ற ஏனைய குழுக்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதே இவ்வருடத்தின் முக்கிய குறிக்கோளாகும்’ என்று கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்‘சர்வதேச உறவுகளை அதிகரித்து, இரத்தினக்கல் கொள்வனவு மற்றும் உற்பத்தி நாடுகளுடன் தொடர்புகளை மேம்படுத்துவது எமது நோக்கமாகும். 

இதில் பிரதானமாக நாம் அவதானிக்கக்கூடிய நாடுகளாக ஹொங்கொங்,தாய்லாந்து,சிங்கப்பூர்,மலேசியா,ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா,ஜேர்மன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளும் இதில் அடங்கும்.

தற்போதைய நிலையில் நாம் பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். மேலும்,பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதிலும் இருதரப்பு மற்றும் பலதரப்பு சந்திப்புக்களை தொடர்ந்து முன்னெடுப்பதிலும் நாம் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றோம்” என்றும் அவர் கூறினார்.

அரச மற்றும் தொழிற்துறைகளுக்கு இடையில் இணைப்பாளராகச் செயற்பட்டு வரும் SLGJA, தொழிற்துறை சார்பாக பிரதிநிதித்துவப்படுத்துவதிலும்,தொடர்புகளை மேற்கொள்வதிலும் முக்கிய இடம் வகிக்கின்றது.

அரசாங்கத்துடன் சிறந்த நட்புறவைப் பேணி வருவது சங்கத்தின் மற்றுமொரு முயற்சியாகும். 

இதனைத் தொடர்ந்து மேற்கொண்டு எமது இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் வர்த்தகத்தை முன்னேற்றுவதில் தொடர்ந்தும் செயற்பட நாம் எதிர்பார்க்கின்றோம்.

வருடத்தின் மிக முக்கிய நிகழ்வான 2019 ஆம் ஆண்டின் FACETS - சர்வதேச இரத்தினக்கல் மற்றும்

ஆபரணங்கள் கண்காட்சி தொடர்பான முக்கிய பொறுப்புகள் திரு. அல்தாப் இக்பால் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தலைவராகவும் வர்த்தக சந்தைகளை ஏற்பாடு செய்வதில் பிரதித் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

பெருந்தொகையான வெளிநாட்டு மொத்த வர்த்தகர்களையும்,சுற்றுலாப் பயணிகளையும் உள்நாட்டிலிருந்து வெளிநாடு சென்றுள்ளவர்களையும் இந்நிகழ்வுக்கு ஈர்ப்பதே அடுத்த வருடத்தின் பிரதான நோக்கமாகும். 

இதன் மூலம் சர்வதேச சந்தைகளில் உள்நாட்டு இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறை பெரும் வரவேற்பைப் பெறும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். உள்நாட்டிலும்,சர்வதேச சந்தைகளிலும் தீவிர சந்தைப்படுத்தல் நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்கவும் ஏற்பாட்டுக் குழு எதிர்பார்க்கின்றது’ என்றும் அவர் கூறினார்.

பட்டை தீட்டப்பட்ட இலங்கை இரத்தினக்கற்கள் மற்றும் இரத்தினக்கற்கள் பொருத்தப்பட்ட ஆபரணங்கள் தொடர்பாக அதிகளவு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ‘இலங்கையின் இரத்தினக்கற்கள்’ என்ற பெயரில் தேநீர் மேசையில் பயன்படுத்தும் சஞ்சிகை ஒன்று 2018 ஓகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 02 வரை இடம்பெற்ற FACETS  நிகழ்வின் போது சங்கத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டின் FACETS SRI LANKA நிகழ்வுக்கான விற்பனைக்கூட பதிவுகளை facets@facetssrilanka.comஎன்ற மின்னஞ்சல் முகவரி மூலம் மேற்கொள்ள முடியும். 

மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள,குறித்த மின்னஞ்சல் முகவரியின் மூலம் SLGJA வைத்தொடர்புகொள்ள முடியும்.

2018 - 19 ஆம் ஆண்டுக்கான நிறைவேற்றுக் குழுவுக்கு பின்வரும் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். தலைவர் - அஹ்ஷான் றிபாய்,முன்னாள் தலைவர் - ஏ.எச்.எம்.இம்திஸாம்,FACETS மற்றும் வர்த்தக சந்தைகள் அபிவிருத்தி பிரதித் தலைவர் - அல்தாப் இக்பால்,இரத்தினக்கற்கள் துறை பிரதித் தலைவர் புன்சிரி தென்னக்கோன்,ஆபரணத்துறை பிரதித் தலைவர் அக்றம் காசிம்,பட்டை தீட்டுதல் துறை பிரதித் தலைவர் அஹமட் ஷரீப்,கௌரவ செயலாளர் ஷெரீப் அப்துல் றஹ்மான்,கௌரவ பொருளாளர் - இஸ்மத் மஜீத்,கௌரவ உதவிச்செயலாளர் ருஷ்வான் காமில்,கௌரவ உதவிப் பொருளாளர் - லியாகத் றஷ்வி ஆகியோரே அவர்களாவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58