"அரசியல் அநாதைகளுக்கு மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்க முடியாது "

Published By: R. Kalaichelvan

28 Nov, 2018 | 08:10 PM
image

(  நா. தினூஷா)

அரசியல் அநாதைகளின்  தேவைகளுக்கு பெரும்பாலான  மக்களின்  அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை உருவாக்க வேண்டுமென  ரவூப்   ஹகீம்  தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

தற்போதைய   அரசியல் நெருக்கடிகள் மாற  வேண்டுமாயின் நாங்களாகவே  ஒரு  தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். 

இன்றைய நிலைமை  ஒரு  அனுபவம் என்றே குறிப்பிட  வேண்டும்.அரசியல்  ரீதியில் சிறுபான்மை கட்சிகள் மற்றும் தலைமைத்துவங்கள்  ஒன்றினைய வேண்டும்  என  குறிப்பிட்டார்.

அலரி மாளிகையின் கேட்போர் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு  கருத்துரைக்கும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்   மேலும்   குறிப்பிடுகையில் 

அரசியல் ரீதியில்  இன்று   பாதை   தடம் புரண்டுள்ளதுஇஅரசியல் ரீதியில் அநாதைகளாக வந்தவர்கள்  இன்று  தமது   அரசியல்  எதிர்காலத்தை  கருத்திற் கொண்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டடனர்.

அரசியல்  நெருக்கடிகளின் பெரிது ஒரு தரப்பினர் தாம் கடந்து வந்த அரசியல் பாதையினை  மறந்து விட்டனர்.  

எதிர்கால அரசியல் இருப்பினை தக்கவைத்துக்  கொள்ள நிறைவேற்று அதிகாரத்தின்  பின்னால் செல்கின்றனர்.  

பல  காரணங்களை குறிப்பிட்டு தேர்தலைபிற்போட்டவர்கள் இன்று எம்மைவிமர்சிக்கின்றனர்.   

தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமையயே  இன்றைய  அரசியல் நெருக்கடிக்கு காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும;.

சிறுபான்மை  மககள் மற்றும் சிறுபான்மை அரசியல் தலைமைத்துவங்கள் இன்று  விழிப்புடன்  செயற்பட வேண்டும் ஜனநாயக ரீதியில்  ஒரு  அரசாங்கம் அமைந்தால்   மாத்திரமே   சிறுபான்மை மக்கள்  தொடர்ந்து   எதிர்கொள்கின்ற  பிரச்சினைகளுக்கு  தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்.   

ஐக்கிய  தேசிய  கட்சி  நாட்டில்  பலமிக்க  கட்சியாக  காணப்படுகின்றது.கட்சியின்  சில  மாற்றங்களை  ஏற்படுத்தி  எதிர்வரும்  சவால்களைய எதிர்கொள்வோம்  என்று கட்சியின் தலைமைத்துவத்திற்கு  குறிப்பிட்டுள்ளோம்.

ஐக்கிய தேசிய  கட்சியில்  ஒரு பாரிய மாற்றத்தினை  உருவாக்கு வேண்டுமென தெரிவித்ததோடு ஒரு  தரப்பினரின் அரசியல்  தேவைகளுக்காக  பெரும்பான்மையான மக்கள்  வழங்கிய மக்களானையினை எவருக்கும்  விட்டுக் கொடுக்க முடியாது என குறித்த கலந்துரைாயடலில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51