நீர் பாதுகாப்பு திட்டத்தை முன்னெடுக்கப்பட வேண்டும்:ஹிஸ்புல்லா   

Published By: R. Kalaichelvan

28 Nov, 2018 | 07:40 PM
image

(ஆர்.விதுஷா)

வெள்ள அபாயத்தை கட்டுபடுத்திக்கொள்ள முடிவதுடன்,  தூய நீர் கிடைப்பதற்கும் வழிவகுக்கும் வகையில் மழை நீர் பாதுகாப்பு திட்டத்தை முன்னெடுக்கப்பட வேண்டும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா   தெரிவித்தார். மழை நீரின் மூலம் பாதுகாப்பான நீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாடு  இன்று  சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தல்  இடம் பெற்றது .   

சர்வதேச  நீர் முகாமைத்துவ  மையம்  மற்றும்  அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் , நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து இந்த மாநாட்டை நடாத்தினர் .

 இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  நகர திட்டமிடல்; மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ் புல்லாஹ்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், நெதர்லாந்து, இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பிரித்தானியா,அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 100 பிரதிநிதிகளும்கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அவர் மேலும் தெரிவிக்கையில் , 

சர்வதேச  நீர் முகாமைத்துவ  மையம்  மற்றும்  அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் என்பவற்றுடன்  நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சு இணைந்து  மழை நீரின் மூலம் பாதுகாப்பான நீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாட்டை நடாத்துவதை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன் . இந்த திட்டம் எதிர்காலத்தில் மழை நீரை சேகரிக்க சிறந்த திட்டமாக அமைகின்றது. 

மேலும் , இலங்கையின் வருடாந்த மழைவீழ்ச்சி  2000 மில்லி மீற்றர்  வரையில்  அமைகின்றது. அதில்    900 மில்லிலீட்டர் தொடக்கம் 6000 மில்லிமீற்றர் வரையிலான மழைநீர் வேறு பகுதிகளை சென்றடைவதுடன்,  60வீதமான நீர்மட்டுமே பாவனைக்கு உகர்ந்ததாக அமைகின்றது.  மிகுதி மழை நீர்  கடற்பகுதியை சென்றடைகின்றது.

இந்த மழை நீர் சேகரிப்பு திட்டத்தின்  மூலம் வெள்ள அபாயத்தை கட்டுபடுத்திக்கொள்ள முடிவதுடன்,  தூய நீர் கிடைப்பதற்கும் வழிவகைள்  பெற்றுத்தரப்படுகின்றன. ; நீர் என்பது அத்தியாவசியமான மூலாதாரமாக அமைகின்றமையினால் இந்த மடாநாடு முக்கியத்துவம்வாய்ந்ததாக அமைகின்றது. 

அத்துட்ன், மழை நீரில் ஒருபகுதி அணைக்கட்டுக்களுக்கு திருப்பிவிடப்படுகின்றன.  வடமத்தியமாகாணத்தில் பெருந்;தொகையான மக்களும் வவுனியா , குருநாகல் ஆகிய பகுதியை சேர்ந்த மக்களும் நீர் தொடர்பான சிறுநீரகப்பிரச்சினைக்கு முகங்கொடுக்கின்றனர். 

இந்த மக்கள் அதிக அளவில் திறந்த கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகளினூடாகவே குடி நீரை பெற்றுக்கொள்கின்றனர் . ஆகவே தான் அவ்வாறான நோய்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை கருத்தில் கொண்டு நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சு தூயநீரை பெற்று கொடுப்பதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருவதுடன், நோய்தாக்கத்திற்கு உள்ளானவர்களுக்கு உதவித்திட்டங்களையும் வழங்குகின்றது. 

மேலும் , தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைமூலமும் தூய நீரை பெற்றுக்கொள்வதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு குழாய் மூலம் தூய நீர் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47