இதய நோயாளிகள் செய்யக்கூடியது என்ன?

Published By: R. Kalaichelvan

28 Nov, 2018 | 06:17 PM
image

இன்றைய நெரத்தில் யாருக்கு வேண்டுமானாலும் இதய நோய் வரலாம். 

இருப்பினும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், தொடர்ந்து ஆறு மணி நேரம் மேல் ஒரேயிடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்கள், மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலில் உள்ளவர்கள், உயர் குருதி அழுத்தம் உள்ளவர்கள், இரத்தச்சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தாதவர்கள், உடற்பருமனுக்கு ஆளானவர்கள் ஆகியோருக்கு இதய பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.இந்நிலையில் இதய பாதிப்பு வருவதற்கு வாய்ப்புள்ளவர்கள் கீழ்கண்ட விடயங்களை அவசியம் பின்பற்றவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

சரியான நேரத்திற்கு சாப்பிடவேண்டும். சாப்பாட்டில் நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவேண்டும். 

பீட்டா கரோட்டின் அதிகளவில் உள்ள முட்டைகோஸ், காரட், கீரை வகைகளையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். 

உணவில் சோடியம் சேர்ப்பதை குறைத்துக் கொள்ளவேண்டும். ஒன்றேகால் ஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்தால் போதுமானது. 

போதுமான அளவிற்கு குடிநீரை அருந்தவேண்டும். ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்கள் என கணக்குவைத்துக் கொண்டு வாரத்திற்கு நான்கு நாட்கள் நடைபயிற்சி செய்யவேண்டும். 

இதனை தொடர்ந்து செய்தால் நல்லது.

 இடைவேளை நேரங்களில் தேநீர் அருந்துவதைக் காட்டிலும் கிரீன் டீ எனப்படும் தேநீரை பருகலாம். 

இரவில் எட்டு மணித்தியாலம் வரை ஆழ்ந்து உறங்கவேண்டும். உங்கள் உயரம் மற்றும் எடையை மனதில் கொண்டு தொடர்ந்து பராமரிக்கவேண்டும். 

அலுவலகங்களில் மின் தூக்கியை விட மாடிப்படிகளில் ஏறுவதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். 

வீட்டு வேலைகளையும் செய்தால், கூடுதல் உடற்பயிற்சி செய்வதற்கு சமமாகும்.

டொக்டர் ராஜேஷ்குமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27