Published by R. Kalaichelvan on 2018-11-28 15:39:36
அவுஸ்திரேலியா, சிட்னியல் ஏற்பட்ட பாரிய புயல் காரணமாக 500 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் அவசர உதவிகளை கோரியுள்ளதுடன் புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ள அதே வேளை மின்சார விநியோகம் தடைபட்டு காணப்படுவதோடு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் ஒருமாதித்திற்கு தேவையான சாரசரி மழை வீழ்ச்சியானது இரண்டு மணித்தியாலங்களுக்குள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்களில் இருந்த 11 பேரை அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர் எனினும் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.