அரசியல் நாடகத்தை கைவிட்டு 1000 ரூபாவை பெற்றுக்கொடுங்கள்!

Published By: Daya

28 Nov, 2018 | 02:21 PM
image

அரசாங்கத்துக்கான  ஆதரவு மீள்பரிசீலனை, அமைச்சுப் பதவி துறப்பு என்றெல்லாம் அறிவிப்பு விடுத்து  அரசியல் நாடகமாடாது, தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க உடனடியாக  நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை வலியுறுத்தியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியான வேலுகுமார்.

அரசியல் நெருக்கடியால் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதியின் சூழ்ச்சி நடவடிக்கையால் அரசியல் ரீதியில் இலங்கை அநாதையாக்கப்பட்டுள்ளது. ஒருமாதத்துக்கு மேலாக அரச நிர்வாகம் முற்றாக இயங்கவில்லை. அரசாங்கமும் அமைக்கப்படவில்லை. இதனால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவருகின்றது.சுற்றுலாத்துறைக்கு சமாந்தரமாக பெருந்தோட்டத்துறையும் அரசியல் குழுப்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பள உயர்வு கிடைக்காததால் தோட்டத்தொழிலாளர்களும் திண்டாடிவருகின்றனர்.

கூட்டுஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்குரிய பேச்சுவார்த்தைகள் தீவிரமாக இடம்பெற்றுவந்தவேளையிலேயே சூழ்ச்சிமூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. கலந்துரையாடலுக்கு தலைமைத்துவம் வழங்கிவந்த தரப்பினர்  ஓடோடிச்சென்று, ‘சூழ்ச்சி அரசை’ ஆதரித்து, அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாறு பதறியடித்துக்கொண்டு பதவியை பெற்றவர்கள், மஹிந்தவுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெறுவது குறித்து பரீசிலனை செய்யப்படும், பதவி துறக்கப்படும் என்றெல்லாம் தற்போது அறிவிப்பு விடுத்துவருகின்றனர். ஓடோடிச்சென்று அமைச்சுப் பதவியை பெறுவதற்கு முன்னர் இது குறித்து சிந்தித்திருக்கவேண்டும். தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கினால் தான் ஆதரவு என்ற உத்தரவாதத்தை பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு செய்திருந்தால் சமூகம் சார்பாக நாமும் பெருமை சேர்த்திருப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56