தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சி உறவு வலுவாக உள்ளது- தொல் திருமாவளவன்

Published By: Daya

28 Nov, 2018 | 11:37 AM
image

தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் உறவு வலுவாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடனான வழக்கமான தோழமையான சந்திப்பு தான் . கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கலந்தாய்வு செய்தோம். தி.மு.க.விற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே இடைவெளி இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை சிலர் திட்டமிட்டு தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.

தி.மு.க. கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில். மிகவும் யதார்த்தமான முறையில் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அதற்கு பல்வேறு யூகங்களைக் கருத்துகளாகத் தொடர்ந்து சிலர் பரப்பி வருகின்றனர். தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான உறவு வலுவாக உள்ளது. இதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை.

மக்களவைத் தேர்தலில் இடம் குறைவாகத் தருவதற்காகத்தான் இதுபோல் தி.மு.க. செய்கிறதா என கேட்கிறீர்கள்? இது திட்டமிட்ட சதி முயற்சி. தி.மு.க. அணியிலிருநது சில கட்சிகளை உருவிவிடலாம் என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கின்றனர். அது பலிக்காது. துரைமுருகனும் நானும் இப்போது சந்தோஷமாகத்தான் பேசிக் கொண்டோம். தேர்தல் ஆணையம் தேர்தல் திகதியை அறிவிக்கும் போது தான் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடையும்.

எதிர்வரும் மக்களவை தேர்தலில் தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரளவேண்டும். வலிமையான கூட்டணியாக தேர்தலை சந்திக்கவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்து வருகிறோம். அகில இந்திய அளவில் வகுப்பு வாத சக்திகள் மீண்டும் வலிமைப் பெற்று விடக்கூடாது.

ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவிடக்கூடாது எனும் அடிப்படையில் தான் தேசம் காக்கும் மாநாட்டை திருச்சியில் டிசம்பர் 10 ஆம் திகதியன்று நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அந்த மாநாட்டில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றுகிறார்கள். அது குறித்த கலந்தாய்விற்காகவும் இந்த சந்திப்பு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ஸ்டாலின் நிச்சயம் கலந்துகொள்வார்.” என்றார்..

முன்னதாக சென்னை அறிவாலயத்தில் தொல் திருமாவளவன்= ஸ்டாலின் சந்திப்பின் போது தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ரவிக்குமார் ஆகியோரும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52