கத்தி குத்திற்கு இலக்கான இளைஞர் பலி!

Published By: Daya

27 Nov, 2018 | 05:11 PM
image

கொழும்பில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு புறக்கோட்டை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த பத்தனை திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த  21 வயதான குமார் டிக்ஷனின் சடலம் இன்று அதிகாலை 4 மணியளவில் திம்புள்ள தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.கொழும்பில் பழக்கடை ஒன்றில் பணி புரிந்து வந்த நிலையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பில் மாறியதையடுத்து, இவர் கூரிய ஆயுதங்களால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் பணி புரியும் மலையக இளைஞர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும், இவ்வாறானதொரு சம்பவம் இனிமேல் மலையக இளைஞர்களுக்கு ஏற்படக்கூடாது என திம்புள்ள கீழ்பிரிவு தோட்ட மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.உயிரிழந்த குறித்த இளைஞன் தனது வீட்டின் மூன்றாவது பிள்ளை எனவும், இவரின் தந்தை சமீபத்தில் காலமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகள்  நாளை மதியம் திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தில் இடம்பெறவுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்னர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51