105 ஆவது நாளாகவும் தொடரும் மனிதப் புதைகுழி அகழ்வு

Published By: Daya

27 Nov, 2018 | 01:57 PM
image

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று  காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் அவதானிக்க இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட் (Jorn Rohde)மன்னாரிற்கு சென்று மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரடியாக அவதானித்ததோடு,அகழ்வு பணிகள் தொடர்பில் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷவுடன் கலந்துடையாடினார்.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வு பணியானது கடந்த 12 ஆம் திகதி இடை நிறுத்தப்பட்டது.

 பலத்த மழை காரணமாகவும், அரச பணி காரணமாகவும்  மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டிருந்தது.

குறித்த  நிலையில் 105 ஆவது நாளாக இன்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது அகழ்வு பணிகளை நேரடியாக பார்வையிடுவதற்கு இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட்(Jorn Rohde)மன்னாரிற்கு சென்று மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரடியாக அவதானித்ததோடு,குறித்த அகழ்வு பணி தொடர்பாக உரிய விளக்கத்தையும், அகழ்வு பணிகள் தொடர்பில் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷவிடம் கேட்டு அறிந்து கொண்டார்.

தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் குறித்த அகழ்வு பணிகளின் போது கண்டு பிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவற்றில் 230 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இன்றைய அகழ்வு பணி தொடர்பில் செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குழு ஒன்றும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38