“ மஹிந்தவுக்கு  குண்டு துளைக்காத வாகனம் வழங்கினால்  எனக்கும் வேண்டும் ”

Published By: Priyatharshan

24 Mar, 2016 | 05:06 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு குண்டு துளைக்காத வாகனம் கொடுத்தால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். அவர் அதிகாரம் இல்லாமல் இருப்பதால் தான் நாங்கள் அச்சமின்றி செயல்படுகின்றோம் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

மேலும் அரிசியின் விற்பனையை அதிகரிப்பதற்காக கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதாக தெரிவிக்கும் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும் எனவும் குறிப்பிட்டார்.  

மஹிந்தவின் ஆட்சியில் என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டனர். நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இங்கிலாந்து சென்றிருந்தேன். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் யுத்தத்தால் ஏற்பட்ட அழிவு தொடர்பாக உரையாற்றினேன்.  

அங்கு தமிழ் மக்களை சந்தித்து உயிரிழந்த அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதுடன்  சிங்கள மக்களையும் சந்தித்து உயிரிழந்த இராணுவ வீரர்கள் தொடர்பாக கவலை தெரிவித்தேன்.  

சிறையில் அடைக்கப்பட்ட சரத் பொன்சேகா குறித்தும் அவர்களுடன் கதைத்தேன். அதன் பிறகு நான் இங்கிலாந்தில் இருந்து வரும் வழியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியாகும் போது என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டனர்.  ஆனால் நான் தப்பி வந்தேன்.

அந்த காலப்பகுதியில் நாங்கள் மிகவும் அச்சத்துடனேயே   இருந்தோம். எங்களது உயிருக்கு எந்த உத்தரவாதமும் இருக்க வில்லை. தற்போது மஹிந்த ராஜபஷ்வுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதனால் நாங்கள் அச்சமின்றி செயற்படுகின்றோம். இவ்வாறான நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து தனக்கு குண்டு துளைக்காத வாகனம் வழங்கப்பட  வேண்டும் என அ வர் கூறுகின்றார்.  

மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனம் வழங்குவதானது  எனது உயிருக்கே அச்சுறுத்தலாகும். ஏனென்றால் அவர் அதிகாரம் இன்றி இருப்பதால்தான் நாங்கள் அச்சமின்றி வெளிப்படையாக கதைக்கின்றோம். அவருக்கு குண்டு துளைக்காத வாகனம் வழங்குவதென்றால் எனக்கும் வழங்க வேண்டும். அப்போது தான் அவரிடம் இருந்து என்னை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

கொழும்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33