விவசாயிகள் மீது இராணுவத்தினர் விசாரணை

Published By: Priyatharshan

24 Mar, 2016 | 04:30 PM
image

அம்பாறை, வட்டமடு பிரதேசத்தில் இம்முறை மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக நெற்செய்கைக்கான ஆரம்ப வேலைகளை மேற்கொள்வதற்கென அங்கு சென்ற விவசாயிகளை வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் சகிதம் வந்து விசாரணைக்குட்படுத்தியதுடன் அங்கு இடம்பெற்று வரும் மண் பண்படுத்தல், உளவு வேலைகளைகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இது விடயமாக வட்டமடு விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.அபுல் காசிம் தெரிவிக்கையில்,

வட்டமடு பிரதேசத்திலுள்ள தமது சொந்தக் காணிகளில் விவசாயம் மேற்கொள்வதில் தாம் ஒவ்வொரு முறையும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றோம். இக்காணிகளில் 1970 ஆம் ஆண்டு முதல் விவசாயம் மேற்கொண்டு வருகின்றோம். இதற்கான காணி பேமிட் பத்திரங்களும் எமது விவசாயிகளிடம் உள்ளதுடன் ஒவ்வொரு போகமும் இக்காணிகளுக்கான அரசாங்கத்தின் உர மானியம் மற்றும் குளங்களிலிருந்து நீரையும் பெற்று வருகின்றோம்.

இது எமது காணி என்பதில் நீர்ப்பாசன திணைக்களமோ அல்லது விவசாய திணைக்களமோ எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காத நிலையில் வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் மட்டும் எமது விவசாயச் செய்கைக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். 

பயங்கரவாத மற்றும் யுத்த காலங்களிலும் நாம் எந்தவிதமான தடைகள் இன்றியும் விவசாயம் மேற்கொண்டு வந்துள்ளோம். இந்நிலையில் முறையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளாது இராணுவத்தினரது உதவியைப் பெற்று வட்டமடு மற்றும் வக்குமுட்டியா, திம்பிரிக்கொல்ல, குலாதுஸ்ஸ போன்ற பல்லாயிரக் கணக்கான விவசாயகக் காணிகளை வனபரிபாலன திணைக்களத்திற்குட்படுத்தி 2010ஆம் ஆண்டு வர்த்தமாணி அறிவித்தல் செய்யப்பட்டது.

இதனையடுத்து வட்டமடு, வேம்பையடிக் கண்டம், கொக்குழுவாய்க்கண்டம், மொறான வட்டிக்கண்டம், வட்டமடு புதுக்கண்டம் உள்ளிட்ட சுமார் 1400 ஏக்கர் விவசாயக் காணிகளில் விவசாயம் செய்வதற்கு வனபரிபாலன திணைக்களம் தடைவிதித்து வருகின்றது.

இவ்வாறு அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்ட  டிப்பமடு, பொத்தானை, பெரிய திராவ, பள்ளச்சேனை போன்ற காணிகளில் எந்தவிதமான தடைகளுமின்றி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இதேவேளை வட்டமடு பிரதேச ஏழை விவசாயிகள் மட்டும் விவசாயம் மேற்கொள்வதற்கு தடைகளை ஏற்படுத்துவதன் காரணம் என்ன? எனவும் இந்த நல்லாட்சியில் எமக்கான தீர்வை அரசாஙகம் உடன் பெற்றுத்தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56