65 ஆயிரம் வீடமைப்பு திட்டத்தில் பாரிய ஊழல் மோசடி : அநுர திஸாநாயக்க 

Published By: Priyatharshan

24 Mar, 2016 | 03:01 PM
image

(ப.பன்னீர் செல்வம், ஆர்.ராம்)

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் கட்டட கேள்வி மனுக் கோரலின் போதும் வடக்கில் 65 ஆயிரம் வீடமைக்கும் திட்டத்தின் போதும் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றிருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார  திஸாநாயக்க எம்.பி. சபையில் சந்தேகம் வெளியிட்டார்.

இன்று வியாழக்கிழமை நிலையியற் கட்டளை 23/2 இன் கீழ் கேள்வி எழுப்பிய போதே மேற்கண்டவாறு சந்தேகம் வெளியிட்டார்.

அவர் சபையில் கேள்வியெழுப்பி மேலும் கூறுகையில்,

கடந்த கால ஆட்சியாளர்கள் மோசடிகளில் ஈடுபடுவதாகவும் நிதியை பாரியளவில் வீண்விரயம் செய்து சூறையாடுவதாகவும் குற்றம் சாட்டி மக்கள் ஆணை கோரினார்கள். 

அந்தக் கோரிக்கைக்கு மக்கள் ஆணை வழங்கி நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கினார்கள். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்திலும் மோசடிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் கட்டடத்திற்காக 35 ஆயிரம் அடி பரப்பளவான கேள்வி மனுக்கோரல் 2015 செம்டெம்பர் 15ஆம் திகதி கோரப்பட்டது. 

மூன்று நபர்களின் விலை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எனினும் மாதமொன்றுக்கு 30 இலட்சம் வரை தொகை மதிப்பிடப்பட்டிருந்த விலைமனுதாரருக்கு அக்கேள்விப்பத்திர அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் மீள்பரிசீலனை செய்யப்பட்டு குறித்த கட்டடத்திற்காக மாதமொன்றுக்கு 42 இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. 

இவ்வாறான நிலையில் எவ்வாறு ஏனைய கேள்விப்பத்திர மனுதாரர்களை நிராகரித்து குறித்த மனுதாரருககு எவ்வாறு அனுமதிவழங்கப்பட்டது. 

மீள்பரிசீலனை செய்யப்படும் போது எவ்வாறு தொகை அதிகரிக்க முடியும். அவ்வாறு அதிகரிக்கும் போது எவ்வாறு அந்த மனுதாரருக்கு வழங்கமுடியும். குறித்த கட்டடத்தில் வாகனத்தரிப்பிடவசதிஇ மின்தூக்கிஇ உள்ளிட்ட வசதிகள் காணப்படுவதாக காரணம் கூறப்பட்டாலும் கோரப்பட்டதற்கிணங்க முழுமையான அளவு இடப்பிரமாணம் காணப்படுகின்றதா என்றால் இல்லை. 35 ஆயிரம் அடியிலும் குறைவான இடவசதியே காணப்படுகின்றது. மேலும் திறந்தவொரு கேள்வி மனுக்கோரலை ஏன் செய்யவில்லை என்பதும் ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்ததாக 

வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன. வடக்கில் இந்த அரசாங்கத்தின் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் செலவிடப்படுகிறது. 

அதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டம் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவில் உருவாக்கப்படுகின்றது. அவ்வாறிருக்கையில் குறித்த நவீன வீட்டுத் திட்டமாக கூறப்படும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் வீடொன்றுக்கு 12 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டது. 

ஆனால் தற்போது அந்த வீடொன்றுக்கான செலவீனம் 21 இலட்சமாக கணிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாரியதொரு அதிகரிப்பு திடீரென ஏற்படுவதற்கான காரணம் என்ன? தொழிநுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால் அந்த அறிக்கையை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன் அண்மைக்காலமாக இச்செயற்திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சின் ஊழியர்கள் இடமாற்றப்படுவதாகவும் கூறப்படுகின்றது. எனவே குறித்த வீட்டுத் திட்டத்திலும் அமைச்சின் கட்டடத்திற்கான கேள்வி மனுக்கோரலிலும் பாரிய மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகவே கருத முடிகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒரு போதும் நாம் இடமளிக்கப்போவதில்லை. இதன் உண்மையான நிலைமையை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55