நாட்டை காக்கவே முடிவெடுத்தேன்  - மஹிந்த 

Published By: Vishnu

25 Nov, 2018 | 06:58 PM
image

ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாமல் போன நாட்டை காப்பாற்றுவதற்காகவே ஜனாதிபதி எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

நாங்கள் கடந்த ஒக்டோபர்  26 ஆம் திகதி தற்காலிக அரசாங்கம் ஒன்றினை அமைப்பதாகவே தெரிவித்திருந்தோம். இந்த அரசாங்கத்தின் மூலம் தொடர்ந்தும் ஆட்சியை கொண்டு செல்வதற்கான எதிர்பார்ப்பு எமக்கு இருக்கவில்லை. 

கூட்டு எதிர்கட்சியின் ஒரு சில உறுப்பினர்களே இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது முழு நாட்டுக்கும் தெரிந்த விடயம். ஏனெனில் இது தற்காலிக அரசாங்கமாகும். எங்களது நோக்கம் என்னவெனில் மக்கள் ஆணையின் மூலமாக தேர்தல் ஒன்றினை நடத்தி புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதாகும். 

நான் பிரதமராக சத்திய பிரமாணம் செய்துகொண்ட நாள் முதல் இதனை தெரிவித்து வருகின்றேன். என்றாலும் எதிர் தரப்பினர், அவர்களின் ஒரே எதிர்பார்ப்பாக இருப்பது தேர்தல் ஒன்றுக்கு செல்லாது பழைய அரசாங்கத்தையே தொடர்ந்து கொண்டு செல்வது என்பதே அவர்களின் நோக்கம். அதுதான் பிரச்சினையாக உள்ளது. தேர்தலுக்கு இன்னமும் 18 மாதங்களே இருக்கும் நிலையில் எதற்காக அரசாங்கம் ஒன்றை பொறுப்பெடுத்தீர்கள் என சிலர் என்னிடம் கேட்கின்றனர். 

ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களும் நான் அவசரப் பட்டதாக தெரிவித்ததை அறிந்தேன். இன்னமும் 18 மாதங்கள் பொறுத்திருந்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கலாம், நாங்கள் தற்போது அரசாங்கத்தை அமைத்திருப்பது தொடர்ந்து இந்த ஆட்சியை கொண்டு செல்வதற்கு அல்ல. பொதுத் தேர்தலை நடத்துவதற்காகும். ஜனாதிபதியும் மக்கள் முன் உரையாற்றும் போது நாட்டினை கொண்டு செல்ல  இயலாத கட்டத்தில் என்னிடம் வழங்கியதாக குறிப்பிட்டார். அதனால் இவ்வாறான ஒரு நிலையில் எனக்கு நாட்டினை பொறுப்புத் தரும் போது அந்த பொறுப்பினை ஏற்காது இருக்க முடியுமா. இது அரச அதிகாரம் தொடர்பான பிரச்சினை அல்ல. எமது தேசத்தின்  தலையெழுத்து தொடர்பான பிரச்சினையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47