சம்பள உயர்வு கோரி புஸ்ஸலாவை நகரில் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

25 Nov, 2018 | 03:56 PM
image

புஸ்ஸலாவை  மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 250 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் எழுச்சிமிகு இளைஞர் குழு என்ற அமைப்பு, ஆசிரியர்கள், யுவதிகள் எனப் பலரும் ஒன்றுகூடி ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி புஸ்ஸலாவ நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கக்கோரி பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷமிட்டதுடன் இந்தச் சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு தங்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை பல தடவைகள் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் இடையில் நடைபெற்ற போதிலும் அதில் எவ்வித தீர்மானமும் எடுக்காத காரணத்தால் கடந்த சில  வாரக் காலமாக தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென இன்று நாட்டில் வடக்கு, கிழக்கு உட்படப் பல பிரதேசங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் இதனை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31