இடைக்கால கணக்கு அறிக்கையை முடிந்தால் சபையில் சமர்ப்பித்து காட்டுங்கள் ;ஏரான் 

Published By: Digital Desk 4

25 Nov, 2018 | 02:52 PM
image

இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினையோ அல்லது கணக்கு அறிக்கையினையோ முடிந்தால் சபையில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்காட்டுமாறு முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரட்ண வீரகேசரிக்கு வழங்கிய பிரத்திய செவ்வியின் போது சவால் விடுத்துள்ளார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க முடியாததன் காரணமாகவே பிரதமராகவும், இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகவும் இருந்த பின்னர் மீண்டும் பிரதமர் பதவியை சட்டவிரோதமாக பெற்றிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ பதவிக்காலத்தில் ஒருவருடம் முன்னதாக 2015இல் ஜனாதிபதி தேர்தலுக்குச் சென்றிருந்தார். எதிர்பாராதவிதமாக அவர் தேர்தலில் தோல்வியைத் தழுவியதால் நாமே அந்த நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. அதற்கு நாம் பின்னிற்கவில்லை. ஏற்படுத்திய மாற்றமும் ஆபத்தும் நாங்கள் நாட்டை பொறுப்பேற்கின்ற போது நாட்டின் வருமானம் பாதாளத்தில் இருந்தது. 

அரச செலவீனங்களுக்கு நிதி இருக்கவில்லை. நாட்டின் மொத்த உற்பத்தி 11சதவீதமாகவே காணப்பட்டது. வரவுசெலவுத்திட்டத்தில் பற்றாக்குறை 7சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. எனினும் நாம் கடந்த மூன்று ஆண்டுகளில் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை 5சதவீதமாக குறைத்தோம். நாட்டின்  வருமானத்தினை 14 சதவீதமாக அதிகரித்தோம். பணவீக்கத்தினை படிப்படியாக குறைத்தோம். வெளிநாட்டு இருப்புக்கள் கடந்த ஜுன் மாதம் அதியுச்சமாக 9 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்திருந்தன.

இவ்வாறிருக்கையில், நடப்பாண்டில் மாத்திரம் 1980 மில்லியன் ரூபா மீளச் செலுத்த வேண்டியிருந்தது. 2019 ஜனவரியில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களும் ஏப்ரலில்  500 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலுத்த வேண்டியுள்ளது. இவற்றுக்காகவே அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மூலம் கிடைத்த நிதியை முழுமையாக திறைசேரியினுள் பாதுகாத்திருந்தோம். இதற்காக தீவிரப்பொறுப்பு முகாமைச்சட்டத்தினையும் நிறைவேற்றி, இலங்கை வங்கிக்கு இவ்வாறான நிதியை நிருவகிப்பதற்கான உரித்தையும் பெற்றுக்கொடுத்திருந்தோம்.

கடந்த மாதம் 26ஆம் திகதி அரசியல் நெருக்கடி ஏற்பட்டதன் பின்னரான சூழலில் கடன்களுக்கான வட்டி வீதங்கள் அதிகரித்துச் செல்கின்றன. குறிப்பாக கடந்தவாரத்தில் வட்டிவீதம் ஒருவீதத்தினால் கூடியுள்ளது. இவ்வாறு அதிகரித்துச் செல்கின்றபோது அதிகளவு வட்டி செலுத்த வேண்டிய நிலைமைக்குள் அனைவரும் தள்ளப்படுவோம். இதனை முகாமை செய்வதாயின் அதிகளவு வரி விதிக்க வேண்டியோ அல்லது அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தினதும் விலைகளை உயர்த்த வேண்டிய ஏற்படலாம். இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்வதை தடுக்க முடியாது. அத்துடன் கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தையில் 165மில்லியன் டொலர்கள் சடுதியாக வெளித்திரும்பியுள்ளது.

எமது ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் ஆசிய பிராந்தியத்தினை மையமாகக் கொண்டு பார்க்கின்றபோது எமது நாட்டின் பிணைமுறியொன்றி பெறுமதி 9.28 ஆகும். அதேபோன்று இந்தியாவின் பிணைமுறியொன்றின் பெறுமதி 4.73 ஆகவும் பங்களாதேஷ் 3.88 ஆகவும் இந்தோனேஷியா 4.98 ஆகவும் பிலிப்பைன்ஸ் 4.31ஆகவும் மலேசியா 1.09 ஆகவும் பாகிஸ்தான் 9 ஆகவும் காணப்படுகின்றது. ஆகவே இலங்கை பிணைமுறியின் பெறுமதியை விடவும் இவை குறைவாகவே காணப்படுகின்றன. இந்தச் சுட்டியானது சிறந்த நிதிநிருவாகத்தினையே வெளிப்படுத்துவதாக உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ2005முதல் 2014வரையில் கடன்களைப் பெற்றுள்ளார். நாம் 2015இல் இருந்து 2018வரையில் கடன்களைப் பெற்றிருந்தோம். நாம் மூன்று வருடங்கள் பெற்ற கடனில் 49 சதவீதத்தினை மஹிந்த ராஜபக்ஷ பெற்ற கடனுக்கான வட்டியை மீளளிப்பதற்காக மாத்திரமே செலுத்தியுள்ளோம். ஆகவே எஞ்சிய கடன்களை மீளச் செலுத்த முயல்கின்றபோது மேலும் பலத்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம்.

தொடரும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

எமது அரசாங்க காலத்தில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததாக கூறுகின்றார்கள். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது உண்மைதான. ஆனால் பிராந்திய ரீதியாக பார்க்கின்றபோது இந்தியா,  இந்தோனேஷியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் அந்த வீழ்ச்சி குறைவானதாகும். இருப்பினும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதனையடுத்து வீழ்ச்சியடைந்து வரும் இலங்கை ரூயஅp;பாவின் பெறுமதி 2 சதவீதத்தால் மேலும் வீழ்;ச்சியடைந்துள்ளது. ஆனால் இக்காலப்பகுதியில் இந்தியா 2 சதவீதத்தினாலும் இந்தோனேசியா 3.76 சதவீதத்தாலும் பிலிப்பைன்ஸ் 2.14 சதவீதத்தாலும் அதிகரித்து நாணயப்பெறுமதியை வலுவாக்கியுள்ளன. எமது நாட்டை விடவும் நாணயப்பெறுமதி வீழ்ச்சியை அதிகமாகக் கொண்டிருந்த துருக்கியும், ஆர்ஜென்டீனாவும் கூட தற்போது முறையே 5.5ரூபவ் 2.34 சதவீதங்களால் வலுவாக ஆரம்பித்துள்ளன.

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம்

நாம் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற 1.85 பில்லியன் டொலர்களுக்காக இந்த ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அதற்கும் அப்பால் இலங்கை பொருளாதார அடிப்படைகளை முறையாகப் பிரதிபலிக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதற்காகும். இதன்மூலம் வெளிநாடுகள் மற்றும் நாணய வழங்குநர் ஆகிய தரப்பின் தரப்படுத்தல்களில் முன்னிலை பெற்றுக்கொள்ள முடியும். இது அதிகளவில் சர்வதேச கடன்களைரூபவ் முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கின்றது.

சர்வதேசத்தில் பிச்ரூபவ் ஸ்டான்டட் அன்ட் புவர், மூடீஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுமே தரப்படுத்தலில் முன்னிலை வகிக்கின்றன. இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணய வழங்குநர் மற்றும் முன்னுரிமை பிணையளிக்கப்படாத தரப்படுத்தல்களை பி1 (எதிர்மறை) இலிருந்து பி2 (நிலையானது) இற்கு தரம் குறைப்பதாக மூடிஸ் முதலீட்டாளர் சேவை அறிவித்துள்ளது. மேலே நான் குறிப்பிட்ட அனைத்து விடயங்களுமே இந்த அறிவிப்பு வெளியாகுவதற்கு காரணமாகியுள்ளது. இந்த அறிவிப்பின் பின்னர் நிலைமைகள் மேலும் மோசமடையலாம். 

நெருக்கடியால் தற்காலிகதடைகள்

மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒக்டோபர் 29ஆம் திகதி மீள் ஒப்பந்தம் செய்ய தீர்மானித்திருந்தோம். அதற்கான பேச்சுக்கள் 26ஆம் திகதி காலையில் இடம்பெற்றிருந்தபோதும் அன்று மாலையில் அரசியல் சூழ்ச்சி அரங்கேறிவிட்டது. இதனால்  தற்போது சர்வதேச நாணய நிதியம் 250 மில்லியன் டொலர்கள் எஞ்சிய தொகையொன்றை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இலங்கை மீதான நம்பிக்கை குறைவடைகின்றது. அது தரப்படுத்தல்களில் பின்னடைவைச் சந்திப்பதற்கு காரணமாகி விடுகின்றது.

இதனைவிடவும் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவியுடன் குறைந்த வட்டியில் 1.78 பில்லியன் டொலர்களைப் பெற்று இலத்திரனியல் புகையிரத சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தபோதும் அச்செயற்றிட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஐக்கிய அமெரிக்காவின் மில்லேனியம் சலன்ஜ் கோப்பரேசன் திட்டத்தின் கீழ் நன்கொடையாக 480 மில்லியன் டொலர்கள் வழங்குவதாக இருந்தபோதும் அதுவும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தாண்டின் நிறைவடைந்த காலப்பகுதியில் மட்டும் 22 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்திருக்கின்றார்கள். தற்போது 40 நாடுகள் இலங்கைக்கு செல்வது தொடர்பில் பாதுகாப்பு குறித்த ஆலோசனையை வழங்கியுள்ளது. ஆகவே நாட்டின் வருமானத்தில் இவ்விடயம் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதற்கு வழிவகுப்பதாக உள்ளது.

கணக்கு அறிக்கையும் சவாலும்

இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தையோ அல்லது இடைக்கால கணக்கு அறிக்கையையோ அல்லது வேறெந்த  நிதிக் கூற்றையோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஆகக்குறைந்தது கணக்கு வாக்கிற்கு சென்றால் தற்போது அரசாங்கம் என்று கூறிக்கொண்டிருக்கும் சட்ட விரோதிகள் நிச்சயம்  தோல்வி அடைவார்கள். அவ்வாறு தோல்வியடைகின்றபோது அரசாங்கம் உடனடியாக  லைந்ததாகி விடும். எமது அரசியலமைப்புச் சட்டத்தில் இவ்விடயங்கள் தொடர்பாக தெளிவற்ற தன்மை இல்லை அல்லது மூடியுள்ளது என்று கூறிவிடமுடியாது. 

அவ்வாறு மூடிய இடங்களில் நாம் பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாயங்களையே பின்பற்றி வருகின்றோம். ஆகவே அதனடிப்படையில் எம்மால் செயற்பட முடியும். மிகமுக்கியமாக இரண்டு தடவைகள் நம்பிக்கையில்லாத பிரேரணை நிறைவேற்றப்பட்டு சட்டபூர்வமில்லாத நிலையில் அரசாங்கத்தரப்பினர் என்று கூறிக் கொண்டிருப்பவர்கள்  நிதிசார்ந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எந்த உரித்தும் கிடையாது. தற்போது நாட்டில் பிரதமரோ ரூபவ் அமைச்சரவையோரூபவ் அரசாங்கமோ இல்லை. இருப்பினும் ஏதாவது பிரேரணையை சமர்ப்பிக்குமாறும் அதற்கு வாக்கெடுப்பு நடத்துமாறும் நாம் சவால் விடுகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49