பெண்களுக்கான 20 -20 உலக கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

Published By: Vishnu

25 Nov, 2018 | 10:54 AM
image

பெண்களுக்கான சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை அவுஸ்திரேலியா அணி இங்கிலாந்தை 8 விக்கெட்டுக்களினால் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

10 அணிகள் பங்குபற்றிய 6 ஆவது பெண்களுக்கான இருபதுக்கு- 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் கடந்த 09 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமானது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதின. இதில் அவுஸ்திரேலியா அணி மேற்கிந்தியத்‍ தீவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து.

இதனையடுத்து நடைபெற்று முடிந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந் நிலையில் அவுஸ்திரேலிய மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி இன்று அதிகாலை மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

அதன்படி முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 

அவுஸ்திரேலிய அணி சார்பில் டேனியல் வியாட் 43 ஓட்டத்தையும், அணித் தலைவரி நைட் 25 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் அஸ்லி கார்டனர் 3 விக்கெட்டுக்களையும், மேகன் ஷட் மற்றும் ஜோர்ஜியா வேர்கம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், எல்லிஸ் பெர்ரி ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 106 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கி அவுஸ்திரேலியா அணி 15.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இங்கிலாந்து நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது. 

அவுஸ்திரேலிய அணி சார்பில் கார்ட்னெர் 33 ஓட்டங்களையும், லேனிங் 28 ஓட்டங்களையும், ஹீலி 22 ஓட்டத்தையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக சோஃபி எக்கோலெஸ்டோன் மற்றும் டேனியல் ஹேஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மகளீர் அணி நான்காவது முறையாகவும் உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35