போராடி வீழ்ந்தது பங்களாதேஷ் : ஒரு ஓட்டத்தால் இந்தியா திரில் வெற்றி (Highlights)

Published By: MD.Lucias

24 Mar, 2016 | 09:11 AM
image

கடைசி ஓவரில் 11 ஓட்­டங்கள் பெற வேண்­டிய நிலையில், இந்­தி­யாவின் பாண்­டியா ஓவரை வீச, இந்த ஓவரில் 2 பவுண்­ட­ரிகள் பறக்க அடுத்­த­டுத்து 2 விக்­கெட்­டுக்­களும் விழ கடைசி பந்தில் 2 ஓட்­டங்கள் பெற்றால் பங்­க­ளா­தே­ஷிற்கு வெற்றி என்ற நிலையில், ஒரு ஓட்­டத்­தை­யேனும் பெற்­றுக்­கொண்டால் போட்டியை சம­நி­லையில் முடித்­து­வி­டலாம் என்ற எண்­ணத்தில், பந்து மட்­டையில் படா­ம­லேயே சுவக்தா ஓட, சிறப்­பாக செயற்­பட்ட டோனி ரன் அவுட் மூலம் முஸ்­த­பி­ஸுரை ஆட்­ட­மி­ழக்கச் செய்து 2 ஓட்­டங்­களால் இந்­தி­யா­விற்கு வெற்­றியைத் தேடித் தந்தார்.

இரு­ப­துக்கு 20 தொடரில் மிக வும் பர­ப­ரப்­பாக நடந்த போட்டி இதுதான் என்­று­கூட சொல்லாம். கடை­சி­வரை போராடி வந்த பங்­க­ளாதேஷ் அணி 2 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழுவி பெரும் ஏமாற்­

ற­ம­டைந்­தது. இந்த வெற்­றி­யுடன் இந்­திய அணி தனது அரை­யி­றுதி வாய்ப்பை தக்­க­வைத்­துக்­கொண்­டது. பங்­க­ளாதேஷ் அணிக்கோ தொடரிலிருந்து வெளி­யேறும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இந்தப் போட்­டியில், நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பங்­க­ளாதேஷ் அணி பந்து வீச்சை தேர்வு செய்­தது. இது­வரை ஒரு

தோல்வி ஒரு வெற்­றியை பெற்­ றுள்ள இந்­திய அணி முன்­னேற வெற்றி அவ­சியம் என்ற நிலையில் துடுப்­பெ­டுத்­தாடக் கள­மி­றங்­கி­யது. அதே நேரம், தொட­ரி­லி­ருந்து வெளி யே­று­வதை தவிர்த்­துக்­கொள்ள கள­மி­றங்­கி­யது பங்­க­ளாதேஷ் அணி. அதன்­படி முதலில் துடுப்­பெ­டுத்தா­டிய இந்­தியா 20 ஓவர்­களின் முடிவில் 7 விக்­கெட்­டு­களை இழந்து 146 ஓட்­டங்­களைக் குவித்­தது.

தொடக்க ஆட்­டக்­கா­ரர்­க­ளாக கள­மி­றங்­கிய ஷர்­மாவும், தவானும் நிதா­ன­மாக ஆடி­னார்கள். இதனால் இந்­தி­யாவின் ஓட்ட எண்­ணிக்கை ஆமை வேகத்தில் நகர்ந்­தது. 6 ஓவர்­களில் ரோஹித்தும், தவானும் ஆளுக்கு ஒரு சிக்ஸர் அடிக்க ஆட்­டத்தில் சூடு பிடித்­தது. ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் ரோஹித் ஷர்மா ஆட்­ட­மி­ழந்தார். தவானும் அடுத்த ஓவ­ரி­லேயே ஆட்­ட­மி­ழந்து ஏமாற்­றினார்.

இந்­திய அணி தரப்பில் ரெய்னா 30 ஓட்­டங்­க­ளையும், கோஹ்லி, தவான் முறையே 24,23 ஓட்­டங்­களையும் பெற்­றனர். பங்­க­ளாதேஷ் பந்­து­வீச்­சா­ளர்கள் துல்­லி­ய­மாக பந்­து­வீசி இந்­திய வீரர்­களை திண­ற­டித்­தனர்.

இதனால் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்­கெட்டுக்­களை இழந்து 146 ஓட்­டங்­களை எடுத்தது.

147 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் கள­மி­றங்­கிய பங்­க­ளாதேஷ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று 2 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதில் தமிம் இக்பால்(35), ரஹ்மா(26), ஷகிப் அல் ஹசன் (22) வீதம் ஓட்டங்களைப் பெற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35