சிவனொளிபாதமலைக்கு பெயர் மாற்றம்  ; டக்ளஸை தலையிடுமாறு இந்து மக்கள் பேரவை வலியுறுத்தல் 

Published By: Vishnu

23 Nov, 2018 | 02:46 PM
image

சிவனொளிபாத மலைக்கு காலாகாலமாக இருந்துவந்த சிவனொளிபாத மலை எனும் பெயரை மாற்றி புத்தரின் பாதஸ்தானமாக நிலையான பெயர்க்கல் பதித்திருக்கும் செயற்பாடுக்கு இந்து மத விவகார அமைச்சராக பதவியேற்றுள்ள டக்ளஸ் தேவானந்தா தலையிட்டு இப் பெயர்மாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்து, முன்பிருந்தது போன்று சிவனொளிபாத மலை என மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இந்து மக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

மட்டக்களப்பு நகர், கல்லடி, கோட்டைக்கல்லாறு போன்ற பகுதிகளில் இன்று காலை இந்து மக்கள் பேரவை, மட்டக்களப்பு  எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

புத்தரின் பாதஸ்தானம் என பெயர் மாற்றிய செயற்பாட்டை நாம் புறந்தள்ளிவிட முடியாது, அவர்கள் செய்த இச் செயற்பாடு எப்போதும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது, அது இன ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடாகும் அத்துடன் இது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது.

இப்பெயர் மாற்றம் தொடர்பில் தற்போதைய இந்து விவகார அமைச்சராகவுள்ள டக்ளஸ் தேவானந்தா தலையிட்டு இரத்துச் செய்யும் செயற்பாட்டை உடன் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாக குறிப்பாக வடக்கு, கிழக்கில் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேற்றியுள்ளதனை நாம் அவதானித்து வருகின்றோம்.

கடந்த 2016 க்கு முன்னர் பெயர்ப் பலகையில் காணப்பட்ட 'அடம்ஸ்பீக்" என்ற பெயர் அழிக்கப்பட்டு ஆங்கிலத்திலும் ஸ்ரீபாத என்றே எழுதப்பட்டது. அதன் தொடர் நடவடிக்கையாக, இவ்வருடம் சிவனொளிபாதம் என்னும் பெயர் அழிக்கப்பட்டு, கௌதம புத்தரின் பாதஸ்தானம் என்றே மூன்று மொழிகளிலும் பதிக்கப்பட்ட பெயர்க்கல் அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பேரினவாத சிந்தனையை மீண்டும் வெளிக்காட்டியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், இந்து விவகார அமைச்சர் இப் பெயர்­மாற்றத்தினை காலதாமதம் செய்யாது உடனடியாக இரத்துச் செய்து பழையபடி சிவனொளிபாத மலை என்று தமி­ழிலும் குறிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40