உள்ளரங்க மாசை ஏற்படுத்தும் காரணிகள்

Published By: Daya

23 Nov, 2018 | 12:16 PM
image

 உள்ளரங்க மாசை ஏற்படுத்தும் காரணிகள் குறித்து விளக்கம் அளிக்கிறார் வைத்தியர் ஸ்ரீதேவி.

புறச்சூழல் மட்டும் மாசடையவில்லை. எம்முடைய இல்லங்களில் உள்ள உள்ளரங்கங்களும், பணியாற்றும் இடங்களில் உள்ள உள்ளரங்கங்களும் காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணமான சிலவற்றை வைத்தியர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அதனை நாம் முற்றாக தவிர்க்க வேண்டும் அல்லது அதன் பயன்பாட்டைப் பொறுத்து அதனை சுத்தமாக பராமரிக்கவேண்டும் என்று எச்சரிக்கிறார்கள் வைத்தியர்கள்.

அவர்கள் கண்டறிந்திருக்கும் பொருள்களின் பட்டியலில், அறை மணமூட்டி எனப்படும் ரூம் ஃப்ரஷ்னர்ஸ், வியர்வை வாசத்தை அகற்றும் மணமூட்டி எனப்படும் டியோடிரென்ட்ஸ், நுளம்புக் கடியிலிருந்து பாதுகாக்கும் நுளம்பு சுருள், ஊதுபத்தி மற்றும் வாசனை புகை, தரைவிரிப்புகள், பிரதி எடுக்கும் இயந்திரம் எனப்படும் பிரிண்டர், நகலெடுக்கும் இயந்திரம் எனப்படும் போட்டோகோப்பி இயந்திரங்கள் போன்ற பல பொருள்கள் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக உள்ளரங்கத்திலுள்ள காற்று மாசடைகிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

அத்துடன் முறைப்படி காற்றோட்ட வசதி அமைக்கப்படாத அறை, வணிக வளாகங்கள் ஆகியவை கூட காற்று மாசுபடுவதற்கான காரணமாக உள்ளன. குளிரூட்டப்பட்ட அறை மற்றும் வளாகங்களில் சுத்தமான காற்று என்பது இயல்பை விட மிகவும் குறைவான அளவிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

காற்றில் சல்பேட்டுகள், நைட்ரேட்டுகள், அமோனியா, சோடியம் குளோரைடு, கறுப்பு கார்பன் துகள் மற்றும் ஒவ்வாமையைத் தூண்டும் தூசுகள் என ஏராளமானவை மாசடைந்த காற்றில் கலந்திருக்கின்றன.

இதனால் அசுத்தமான காற்று அதிகமாக இருக்கும் அதிகாலை நேரங்களில் குறிப்பாக பனிக்காலங்களில் இதய பாதிப்பு, ஆஸ்மாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் நடைபயிற்சியை சூரியன் வந்தபிறகு தொடங்கலாம். அல்லது வைத்தியர்களின் ஆலோசனையுடன் கூடிய பாதுகாப்பு சுவாச உறையைப் பயன்படுத்திக் கொண்டு உடற்பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04