17,43,601 மில்லியன் ரூபா உள்நாட்டு வெளிநாட்டு கடனாக பெறப்பட்டுள்ளது 

Published By: MD.Lucias

24 Mar, 2016 | 08:43 AM
image

 2015 ஆம் ஆண்டு 17 இலட்­சத்து 43 ஆயி­ரத்து 601 மில்­லியன் ரூபா அர­சாங்­கத்­தினால் உள்­நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கடன்­க­ளாகப் பெறப்­பட்­டி­ருப்­ப­தாக நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சபையில் தெரிவித்தார்.

நேற்று புதன்­கி­ழமை ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான உதய கம்­மன்­பில எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே நிதி அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

2014 ஆம் ஆண்டில் அர­சாங்­கத்­தினால் 7.71 சத­வீத வரு­டாந்த வட்­டிக்கு 9 இலட்­சத்து 65 ஆயி­ரத்து 449 மில்­லியன் ரூபா உள்­ நாட்டுக் கடனும் 3.8 சத­வீத வரு­டாந்த வட்­டிக்கு 4 இலட்­சத்து 22 ஆயி­ரத்து 543 மில்­லியன் ரூபா வெளிநாட்டுக் கடனும் பெறப்­பட்­டி­ருந்­தது.

2015 ஆம் ஆண்டில் 7.48 சத­வீத வரு­டாந்த வட்­டிக்கு 11 இலட்­சத்து 87 ஆயி­ரத்து 231 மில்­லியன் ரூபா உள்­நாட்டுக்கட­னையும் 4.8 சத­வீத வரு­டாந்த வட்­டிக்குக் 5 இலட்­சத்து 56 ஆயி­ரத்து 370 மில்­லியன் ரூபா வெளி நாட்டு கடனை அர­சாங்கம் பெற்­றுள்­ளது.

கடந்த அர­சாங்­கத்­தினால் பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரியாமல் பெறப்­பட்ட கடன்­களை திருப்பிச்செலுத்­து­வ­தற்­காக தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் அதிக கடன்­களை பெறவேண்டி ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­றதன் பின்னர் நாட்டின் எதிர்­காலம் தொடர்­பாக சிந்­தி த்தே செயற்பட்டு வருகின்றது. ஆகவே கடந்த அரசாங்கத்தையொத்த வகையில் எதேச்சாதிகாரப்போக்கில் கடன்களை பெற வில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04