14 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் நால்வரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நால்வரும் நேற்றிரவு 8 மணியளவில் இந்தியாவின், மும்பையிலிருந்து இலங்கைக்கு வந்தபோதே தங்க ஆபரணங்களுடன் சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களுள் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.