2020ஆம் ஆண்டே பாராளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்வோம்  ;  எஸ்.பி.திஸாநாயக்க 

Published By: Digital Desk 4

22 Nov, 2018 | 04:40 PM
image

எம்.ஆர்.எம்.வஸீம்)

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை மஹிந்த ராஜபக்ஷ்வுக்கே இருக்கின்றது. ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்தாலும் இதுவரை அவர்கள் காட்டவில்லை. அதனால் பாராளுமன்றத்தை கலைக்கும் நிலைப்பாட்டை நீக்கிக்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றோம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர ஊடக நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

  தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது. அதனை நாங்கள் தேவை ஏற்படும்போது காட்ட தயாராக இருக்கின்றோம். 120 உறுப்பினர்களுக்கும் அதிகமானவர்கள் எங்களுடன் இருந்தனர். என்றாலும் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததால் மீண்டும் அவர்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இருந்த இடங்களுக்கே சென்றனர். ஆனால் தற்போது எங்களுக்கு பெரும்பான்மை இருக்கின்றது. அதனால் பாராளுமன்றத்தை கலைக்கும் நிலைப்பாட்டை நீக்கிக்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு தெரிவித்துக்கொள்கின்றோம். 

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் முன்னுக்கு செல்லும். அத்துடன் 2020ஆம் ஆண்டே பாராளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்வோம் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33