தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட ஜேவிபி விருப்பம்

Published By: Rajeeban

22 Nov, 2018 | 03:19 PM
image

ஜேவிபியும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஒடுக்குமுறை அரசாங்கங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினரை தெற்கிலும் வடக்கிலும் பிரதிநிதித்துவம் செய்கின்றன என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக இணைந்து போராடவேண்டிய கடமை எங்களுக்குள்ளது என குறிப்பிட்டுள்ளார்

இந்து நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளும் கொள்கையின் அடிப்படையில் பணியாற்றுகின்றன எனவும் தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க அவ்வாறான அணுகுமுறையை கொண்டுள்ள  கட்சிகள் இணைந்து பணியாற்ற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சில விடயங்கள் தொடர்பில் எங்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் உள்ளபோதிலும் எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ள ஜேவிபி தலைவர் ஜேவிபியிடம் இரகசிய நிகழ்ச்சிநிரல் இல்லை தமிழ்தேசிய கூட்டமைப்பிடமும் அவ்வாறான இரகசிய நிகழ்ச்சி நிரல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வெளிப்படை தன்மை காணப்படுவதால் ஒருவருக்கு மற்றையவரின் நிலைப்பாடு தெரியும் என்பதால்  நாங்கள் சிறப்பாக இணைந்து செயற்பட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியும் மகிந்த ராஜபக்ச தரப்பினரும் சர்வதேசமூகத்திற்கு காண்பிப்பதற்காகவும் தங்கள் பலத்தை காண்பிப்பதற்காகவும் தமிழ்தேசிய கூட்டமைப்பினை பயன்படுத்தியுள்ளனர் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளின் தலைவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ள ஜேவிபி தலைவர்  அவர்கள் தங்கள் நலனிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை பயன்படுத்தினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37