சிங்ஹ லே அமைப்­பினர் யார் என்­பது  தெளிவா­னது 

Published By: MD.Lucias

24 Mar, 2016 | 08:19 AM
image

ஒன்­றிணைந்த எதிர­ணியின் எதிர்ப்­புப் ­போ­ராட்­டத்தில் தமிழ் முஸ்லிம் தலை­வர்கள் பங்­கேற்­க­வில்லை. இதன் மூலம் இன­வாத சிங்ஹ லே அமைப்­பினர் யார் என்­பது நாட்­டு­மக்­க­ளுக்கு தோல் உரித்துக் காட்­டப்­பட்­டுள் ளது. இன­வா­தத்தின் மூலம் நாட்டில் அர­சியல் மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்த முடி­யாது என நவ சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

ஐரோப்­பி­யர்கள் இன்று நிம்­ம­தி­யாக தங் கள் அன்­றாட கட­மை­களை மேற்­கொள்ள முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. எங்கு எப்­போது குண்­டுகள் வெடிக்கும் என்று தெரி­யாது அச்­சத்­துடன் வாழ்­கின்­றனர். பிர­ஸல்ஸில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற குண்டு வெடிப்­பினால் முழு ஐரோப்­பிய நாடு­களும் பீதிக்கு ஆளா­கி­யுள்­ளன.

ஐ.எஸ். அமைப்பு இந்த தாக்­கு­தலை பொறுப்­பேற்­றுக்­கொண்­டுள்­ளது. ஆனால் ஐ.எஸ். போன்ற அமைப்­புகள் உரு­வா­கு­வ­த ற்கு பிர­தான காரணம் அமெ­ரிக்­கா­வாகும். அமெ­ரிக்கா அரபு நாடு­களின் வளங்­களை சூறை­யா­டு­வ­தற்­காக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி ஈராக், ஈரான் போன்ற நாடு­க­ளுக்கு தாக்­கு­தல்­களை நடத்­தி­யி­ருந்­தது. அத்­துடன் தற்­போது சிரி­யா­வுக்குள் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்தி நாட்­டுக்­குள்ளே மோதல் இடம்­பெ­று­வதால் நாளாந்தம் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் கொல்­லப்­ப­டு­கின்றர்.

இவற்­றை­யெல்லாம் பொறுத்­துக்­கொள்ள முடி­யாமல் ஐ.எஸ். போன்ற அமைப்­புகள் உரு­வா­கின. அமெ­ரிக்கா கொடுத்த ஆயு­தங்­க­ளைக்­கொண்டே ஐ.எஸ். தாக்­கு­தல்­களை மேற்­கொள்­கின்­றது. தற்­போது அமெ­ரிக்­கா­விலும் இன­வாதம், மத­வாதம் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ளது. அமெ­ரிக்­காவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் டொனால்ட் டரம், தான் தேர்­தலில் வெற்­றி­பெற்றால் அங்­கி­ருக்கும் சிறு­பான்மை இனத்­த­வர்­களை நாட்டை விட்டு வெளி­யேற்­று­வ­தாக தெரி­வித்­துள் ளார்.

இதன் மூலம் இது­வ­ரை­கா­லமும் ஏனைய நாடு­களின் ஜன­நா­யகம் தொடர்பில் குறை கூறி­வந்த அமெ­ரிக்­கா­வுக்கு தற்­போது அந்த நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி தேர்­தலில் டொனால் டரம் வெற்றி பெற்றால் அமெ­ரிக்­காவில் பாரிய அழிவு ஏற்­படும்.

அதே­போன்றே எமது நாட்­டிலும் இன­வா­ தத்தை தூண்டி ஆட்­சியை கைப்பேற்­ற லாம் என சிலர் இன­வாத செயற்­பா­டு­களை தொடர்ந்து மேற்­கொண்டு வந்­தனர். இவர் கள் யார் என்­பது தற்­போது நாட்டு மக்­க­ளுக்கு தெரிய வந்­துள்­ளது. கடந்த வாரம் ஒன்­றி­ணைந்த எதி­ர­ணி­யினர் மேற்­கொண்ட அர­சாங்­கத்­துக்கு எதி­ரான எதிர்ப்பு கூட்­டத்தில் தமிழ், முஸ்லிம் தலை­வர்கள் எவ­ரையும் மேடையில் நிறுத்­த­வில்லை. அத்­துடன் சிறு­பான்மை மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி எவரும் உரை­யாற்­றவும் இல்லை. அப்­ப­டி­யானால் சிங்ஹ லே என்று சொல்­லக்­கூ­டி­ய­வர்கள் நாங்கள் தான் என்­பதை நாட்டு மக்­க­ளுக்கு எடுத்துக் காட்­டி­யுள்­ளனர்.

அத்­துடன் இவர்கள் இரா­ணு­வத்­தினர் பிக்­குமார் மற்றும் அரச துறை­களில் சில­ரையும் இணைத்­துக்­கொண்டு சதித்­திட்­டங்கள் தீட்டி மீண்டும் ஆட்­சியை கைப்­பற்­றலாம் என நினைக்­கின்­றனர். இவர்­களின் எதிர்ப்பு கூட்­டத்­துக்கு கொழும்பில் இருந்து சென்­ற­வர்­களை விட தென்­ப­கு­தியில் இருந்து பஸ்­களில் அழைத்து வந்­த­வர்­களே இருந்­தனர்.

கடந்த அர­சாங்­கத்தில் இருக்கும்போது கொள்­ளை­யி­டப்­பட்ட பணம் தான் இதற்­ கெல்லாம் செல­வ­ழிக்­கப்­ப­டு­கி­றது. அவர் கள் திருடிய பணத்தை அரசாங்கத்து க்கு இது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின் றது. இவர்களின் மோசடிகள் தொடர்பிலும் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியிலேயே உள்ளன. அத னால்தான் இவர்கள் தொடர்ந்தும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு மீண்டும் ஆட் சியை கைப்பற்றலாம் என நினைத்து செயற் படுகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04