நாட்டில் ஜனா­தி­பதி, பிர­தமர் ஆட்­சியில் இருக்­கும்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் ஆட்­சிப்­பொ­றுப்பைத் தன்­னிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு கோரும் வழமை உலகில் எங்கும் இல்­லை­யென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.

ஆணை­யி­றவு புலி­க­ளிடம் வீழ்ந்­த­போது யாழ்ப்­பா­ணத்­திற்கு செல்­வ­தற்கு பலர் பின் வாங்­கிய தரு­ணத்தில் இரண்டு மணி நேரத்­திற்குள் பலா­லிக்குச் சென்றேன். அங்கு முறை­யாக திட்­ட­மிட்டோம். அங்கு இன்றும் அப்­ப­துங்­குக்­கு­ழி­யுள்­ளது. அதன் தொடர்ச்­சி­யா­கவே மாவி­லாறில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

நேற்று புதன்­கி­ழமை சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்

இந்­நாட்டில் தேசிய பொரு­ளா­தார திட்டம் இருக்­க­வில்லை. இதன் கார­ண­மா­கவே தற்­போது பாரிய பொரு­ளா­தார வீழ்ச்சி ஏற்­பட்­டது. கடந்த காலத்தில் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை படு­கொலை செய்­தார்கள். ஆசி­யாவின் ஆச்­ச­ரியம் எனக் கூறி­னார்கள். அதனை நோக்கிச் செல்­ல­வில்லை. மக்­களை கடின வாழ்க்­கைக்­குள்­ளேயே கொண்டு சென்­றார்கள்.

கடந்த காலத்தில் நாடு தற்­கொலை செய்­வதில் மூன்­றா­வது இடத்தில் காணப்­பட்­டது. மகிழ்ச்­சி­யான நாடு­களின் பட்­டி­யலில் 174 ஆவது இடத்தைப் பெற்­றி­ருந்­தது. மக்­களின் கடின வாழ்க்­கையை நெருக்­க­டியை மறைப்­ப­தற்­காக பாரிய நிதியை செல­வ­ழித்து கலை விழாக்கள், களி­யாட்­டங்­களை செய்­தார்கள். தேசத்­துக்கு மகுடம் என்ற தொனியில் பெரு­ம­ளவில் நிதியை செல­விட்டு மக்­களை திசைத்­தி­ருப்­பி­னார்கள். தனி நபரின் வரு­மானம் 2500 டொலர்கள் 3000 டொலர்கள் எனக் கூறி­னார்கள்.

உண்­மை­யி­லேயே நாட்டில் 50 சத­வீ­த­மான தனி நபர்­களின் வரு­மானம் 500 டொலர்­க­ளுக்கும் குறைந்­த­தா­கவே காணப்­பட்­டது. நான்கு பேர் கொண்ட குடும்­பத்தின் ஆண்டு வரு­மானம் மிகக் குறைந்த மட்­டத்­தி­லேயே இருந்­தது.

இய­லு­மா­ன­வ­ரையில் கடன் வாங்­கி­னார்கள். தர­கு­களைப் பெற்­றார்கள். கள­வா­டி­னார்கள். இத­னா­லேயே தற்­போ­தைய நெருக்­கடி நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. திறை­சே­ரியை சூறை­யா­டி­னார்கள். கடன் சுமை பத்து மடங்­காக அதி­க­ரித்­தது. மொத்த தேசிய உற்­பத்­தியில் 70 சத­வீதம் கட­னுக்­கான வட்டி செலுத்தப் பயன்­பட்­டதே தவிர கடனை செலுத்த முடி­ய­வில்லை. நீதி­மன்­றங்­களை அழுத்­தத்­திற்கு உட்­ப­டுத்­தி­னார்கள். முழு நாடும் நெருக்­க­டியை சந்­தித்த போதும் ஒரு குடும்­பத்­தி­னரும் அத­னு­டைய அடி­வ­ரு­டி­களும் மகிழ்ச்­சி­யாக இருந்­தார்கள்.

துறை­முக நகர அபி­வி­ருத்­தி­யின்­போது 1500 டொலர் மில்­லியன் கிடைக்கப் பெறும் எனக் கூறி­னார்கள். அந்தத் தொகை இல­வ­ச­மாக வழங்­கப்­ப­ட­வில்லை. 50 ஏக்கர் காணி வழங்­கப்­ப­டு­வ­த­னா­லேயே வழங்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வாறு அனைத்து முத­லீ­டுகள் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளிலும் மோச­டி­களை மேற்­கொண்­டார்கள். அண்­மையில் கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு ஆரம்­பித்­தி­ருக்­கின்­றார்கள். இவ்­வா­றான நிலை­மையை நாட்டில் ஏற்­ப­டுத்­தி­யதால் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டவர் மீண்டும் நாட்டை தன்­னி­டத்தில் ஒப்­ப­டைக்­கும்­படி கோரு­கின்றார். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் ஜனா­தி­பதி, பிர­தமர் இருக்­கையில் எவ்­வாறு ஆட்­சியை ஒப்­ப­டைக்­கு­மாறு கோர முடியும். தேசிய பொரு­ளா­தார திட்­ட­மொன்று காணப்­ப­ட­வில்லை. யுத்த வெற்­றியை விற்­றுப்­பி­ழைக்க முயற்­சித்­தார்கள். அன்று தேனும் பாலும் கிடைத்­த­மையால் இன்று பொது எதி­ர­ணியில் அமர்ந்து கூச்­ச­லி­டு­கின்­றார்கள்.

யுத்­தத்­திற்கு எவ்­வி­த­மான பங்­க­ளிப்­பையும் வழங்­காது யுத்த வெற்­றியை தன­தாக்­கு­வ­தற்கு பாது­காப்பு செய­லா­ள­ரா­க­வி­ருந்த கோத்­தா­பய ராஜபக் ஷ முனைந்தார். யாழ்ப்­பாணம் இரா­ணு­வத்­திடம் வீழ்ந்­த­போது அப்­போ­தைய பாது­காப்புச் செய­லாளர் சந்­தி­ரா­னந்த சில்வா அதனை தனது வெற்­றி­யாக கொள்­ள­வில்லை.

ஆனால் எத­னை­யுமே செய்­யாது யுத்த வெற்­றியை தன­தாக்க முயன்றார். அது மிகவும் வெட்­க­மான விடயம். நான் என்ன பங்­க­ளிப்புச் செய்தேன் எனக் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­றீர்கள். யுத்­தத்தை திட்­ட­மிட்டேன். இரா­ணு­வத்தை அதி­க­ரித்தேன். முறை­யான பொறி­மு­றை­களை முன்­னெ­டுத்தேன். இதற்கு அப்பால் சமா­தான ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்ட தரு­ணத்தில் உயர் பாது­காப்பு வல­யங்­களை நீக்க வேண்டும் என்ற கோரிக்­கைக்கு தனி­யொ­ரு­வ­னாக எதிர்த்தேன். மேலும் ஆணை­யி­றவு புலி­க­ளிடம் வீழ்ந்­த­போது யாழ்ப்­பா­ணத்­திற்கு செல்­வ­தற்கு பலர் பின் வாங்­கிய தரு­ணத்தில் இரண்டு மணி நேரத்­திற்குள் பலா­லிக்குச் சென்றேன்.

அங்கு முறை­யாக திட்­ட­மிட்டோம். அங்கு இன்றும் அப்­ப­துங்­குக்­கு­ழி­யுள்­ளது. அதன் தொடர்ச்­சி­யா­கவே மாவி­லாறில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம். அவ்­வா­றிக்­கையில் குருதி சிந்தி அர்ப்­ப­ணிப்­புடன் போரா­டிய இரா­ணுவ வீரர்­க­ளுக்கு உரிய மதிப்­ப­ளிக்­காது அவர்­களின் அர்ப்­ப­ணிப்பை தமது சுய­ந­லத்­துக்கு பயன்படுத்தவே முனைந்தார்கள். இன்று கூச்சலிடும் நீங்கள் அன்று யுத்தத்தினை முன்னெடுத்த தளபதி திட்டமிட்டு பழிவாங்கப்படும் போது எங்கு சென்றீர்கள். நாட்டை மீண்டும் பாதாளத்துக்குள் கொண்டு செல்வதற்கு முயலாதீர்கள். அதன் அபாயத்தை புரிந்து கொள்ளுங்கள்.

நாட்டில் உரிய பொருளாதார அடித்தளம் இல்லை. மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மீறல்கள் போன்றவற்றால் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையையும் நாம் இழந்து நிற்கின்றோம். ஆகவே மீண்டும் குடும்பமொன்றின் நலனுக்காக நாட்டை வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லாதீர்கள் என்றார்.