சனத்ஜெயசூரிய மீது மற்றுமொரு குற்றச்சாட்டு- பழுதடைந்த பாக்குகளை இந்தியாவிற்கு கடத்த உதவினார்.

Published By: Rajeeban

22 Nov, 2018 | 11:01 AM
image

பழுதடைந்த பாக்குகளை கடத்தியதாக முன்னாள் இலங்கை அணி தலைவர் சனத்ஜெயசூரிய மீது இந்திய பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

இந்தியாவின் நாக்பூரில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பழுதடைந்த பாக்குகளை இந்திய அதிகாரிகள் கைப்பற்றிய வேளை அவற்றிற்கும் சனத்ஜெயசூரியவிற்கும் தொடர்பிருப்பது தெரியவந்ததாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து மும்பாய் பொலிஸிற’;கு சனத் ஜெயசூரிய அழைக்கப்பட்டார் என தெரிவித்துள்ள இந்திய ஊடகங்கள் மேலதிக விசாரணைகள் குறித்த கடிதமொன்றை இந்திய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்  எனவும் தெரிவித்துள்ளன.

மேலும் இரண்டு இலங்கை  கிரிக்கெட் வீரர்கள்  டிசம்பர் 2 ம் திகதி விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட பாக்கு இந்தியாவிற்கு கடத்தப்பட்டுள்ளது எனஇந்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பாக்கு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இலங்கையில் போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன எனவும் இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கை வீரர்கள் தங்கள் அரசாங்கத்தில் தங்களிற்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி அனுமதிப்பத்திரத்தை பெற்று போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர் எனவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவிலிருந்து நேரடியாக பாக்குகள் இறக்குமதி செய்யப்பட்டால் அவற்றிற்கு 108 வீத வரியை செலுத்தவேண்டும் ஆனால் தென்னாசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டால் அதற்கு வரியில்லை என இந்திய  ஊடகங்கள் தெரிவித்துள்ளன

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56