"உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்று பட்டு செயற்படாது தனித்துவமாக செயற்படுகின்றனர்"

Published By: Digital Desk 4

21 Nov, 2018 | 07:09 PM
image

தற்போதைய உள்ளூராட்சி மன்றங்களில்  கூட்டிணைந்த செயற்பாடுகளோ  அல்லது வழி நடத்தல்களோ  இல்லாத நிலையிலேயே செயற்பட்டுவருகின்றது. தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தனித்துவமாக செயற்படுகின்ற நிலையே காணப்படுகின்றது. இது சபையின் வினைத்திறனைக் காட்டமுடியாத நிலை ஏற்படும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் அமர்வுகளில் குழப்ப நிலை ஏற்பட்டு வருகின்றமை தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகைக்குள் இருக்கும் கட்சித்தலைமைகள் தமது அனைத்து உறுப்பினர்களது நடவடிக்கைகள் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் வழி நடத்தல்களை வழங்கவேண்டும் அவ்வாறு இல்லாது விடுகின்றபோது தான் குழப்பங்கள் ஏற்படுகின்றது.

தற்போதுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கு  முன்பு நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பின்னரான சூழலில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நான் பொறுப்பாக இருந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வழி நடத்தல்களை மேற்கொண்டிருந்தேன்.

ஆனால் தற்போது நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கட்சியும் அதற்கான பொறுப்பை கருத்தில் எடுக்கவில்லை. தற்போதுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்று பட்டு செயற்படாது தனித்துவமாக செயற்படுகின்ற நிலையே காணப்படுகின்றது. கூட்டிணைந்த செயற்பாடுகளே அல்லது ஒன்று பட்ட வழி நடத்தல்களே இல்லாத நிலையே காணப்படுகின்றது. 

தற்போதைய சூழலில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வழி நடத்தக்கூடிய இடைவெளி இல்லாத நிலையே காணப்படுகின்றது. கட்சித் தலைமை அதற்கான பொறுப்பைத் தந்திருந்தால் அதனை நடத்தியிருக்க முடியும் அதனையும் அவர்கள் செய்யவில்லை. 

இன்றுள்ள நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் உள்ளன. இக் கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைப்புச் செய்வதற்கு கட்சிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதனைச் செய்யவில்லை. அல்லது இதனைச் செய்தது போதாது என்றே கூறவேண்டும். இதனை ஒழுங்குபடுத்த வேண்டும். இல்லாவிடின் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற முறையில் தனித்துவமாக செயற்படுவார்கள். கட்சிக்குள் இருக்கின்ற உறுப்பினர்களுக்குள்ளே ஒற்றுமையின்மை காணப்படுகின்றது. 

தேர்தல் கட்டமைப்பின் சட்டத்திற்கு ஏற்ப செயற்படுகின்றார்கள் இதுவும் இல்லை என்றால் எல்லாச் சபைகளிலும் குழப்பங்களே ஏற்பட்டிருக்கும். குறித்த விடையங்களைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். 

ஒவ்வொரு சபையும் அதன் தவிசாளர்களும் தாங்கள் நினைத்த மாதிரியே ஒவ்வொரு செயற்பாடுகளையும் செய்கிறார்களே தவிர ஒருங்கிணைந்து செய்கின்ற நடவடிக்கைகளை காணமுடியாதுள்ளது. இதன் காரணமாக சபை நடவடிக்கைகளில் குழப்பங்கள் ஏற்படுகின்றது. இதனால் வினைத்திறனான செயற்பாட்டை காணமுடியாதுள்ளது. சபைகள் வினைத்திறனுடன் செயற்படவேண்டுமாயின் அனைத்துக் கட்சித்தலைமைகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58