மன்னார் நகர சபையின் வரவு செலவு திட்டம் ஏக மனதாக நிறைவேற்றம்

Published By: Daya

21 Nov, 2018 | 04:57 PM
image

 மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாசிப்பு  இன்று புதன் கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வாசிப்பு மன்னார் நகர சபையின் கணக்காளர் தி.றோய் யூலியஸினால் முன் வைக்கப்பட்டது.

இதன் போது நகர சபையின் செயலாளர், உப தலைவர், உறுப்பினர்கள் முன்னிலையில் வாசிப்பு இடம் பெற்றது.

இதன் போது வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், இதர ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டு சபை உறுப்பினர்கள் அனைவரினதும் முழு ஒத்துழைப்போடும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் வரவு செலவு திட்டத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான மொத்த வருமானமாக 149 மில்லியன் 6 இலட்சத்து 28 ஆயிரத்து 550 ரூபாவும், மொத்தச் செலவீனமாக 149 மில்லியன்  6 இலட்சத்து 26 ஆயிரத்து 585 ரூபாவும்,மிகையாக ஆயிரத்து 964 ரூபா20 சதம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சபையில் உள்ள  உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் எவ்வித எதிர்ப்புக்களும் இன்றி குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு மன்னார் நகர சபையின்  2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏகமனதான நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வகையில் சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51