கண்டி-பதியபெலல்ல பிரதான பாதையில் இரண்டு பஸ்வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம்  ரிகிலகஸ்கட மாஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 

கண்டியிருந்து பதியபெலல்ல நோக்கிச் சென்ற பஸ் வண்டியும், பதியபெலல்ல பதியபெலல்லயிலிருந்து கண்டி நோக்கி வந்த பஸ் வண்டியுமே இவ்வாறு  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தின் போது கண்டியிலிருந்து சென்ற பஸ்வண்டியில் 42 பேரும் மற்ற பஸ்வண்டியில் 30 பேரும் இருந்துள்ளனர். 

இரு பஸ்வண்டிகளும் பலத்த சேத்திற்கு உள்ளான போதும் இரு பஸ் வண்டிகளிலுமிருந்த சுமார் 72 பிரயாணிகளும் எவ்வித உயிராபத்துக்களும் காயங்களுமின்றி தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.