பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பியுள்ள முக்கிய தீர்மானம்

Published By: Rajeeban

21 Nov, 2018 | 03:20 PM
image

அமைச்சின் செயலாளர்கள் நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கும் தீர்மானமொன்றினை ஐ தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ளனர். 

இலங்கையின் தற்போதைய அமைச்சரவையின் செயலாளர்கள் நாட்டின் நிதியிலிருந்து எந்த நிதி ஒதுக்கீட்டினையும் மேற்கொள்ளவோ அல்லது செலவீனங்களிற்கு அனுமதியளிக்கவோ முடியாது என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சியின் ஆறு உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு குறித்த தீர்மானத்தை அனுப்பிவைத்துள்ளனர். 

ராஜித சேனாரட்ண ரவிகருணாநாயக்க சம்பிக்கரணவக்க அர்ஜுன ரணதுங்க மனோ கணேசன் ஜெயம்பதி விக்கிரமரட்ண ஆகியோரே இதில் கையெழுத்திட்டுள்ளனர். 

நவம்பர் மாதம் 14 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் காரணமாக அரசியலமைப்பின் கீழ் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது என்ற சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறிவிப்பை சபை ஏற்றுக்கொண்டுள்ளது என ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அரசியலமைப்பின் கீழ் பாராளுமன்றத்திடமே பொதுநிதி தொடர்பான முழுமையான கட்டுப்பாடு உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

15 ஆம் திகதி முதல் இலங்கையின் தற்போதைய அமைச்சரவையின் செயலாளர்கள் நாட்டின் நிதியிலிருந்து எந்த கட்டணங்களையும் அமைச்சர்கள்இ பிரதிஅமைச்சர்கள்இ இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட செயலாளர்களின் சம்பளத்திற்காகவோ அல்லது வேறு கொடுப்பனவிற்கோ வழங்க முடியாது என பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் அமைச்சர்கள் உட்பட வேறு எவரினதும் வெளிநாட்டு செலவீனங்கள் மற்றும் ஹெலிக்கொப்டர் போக்குவரத்து உட்பட உள்நாட்டு செலவீனங்களிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது எனவும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீர்மானத்திற்கு முரணாக செயற்பட்டால் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தீர்மானக் கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44