சூனியக்கடவுளின் கோவில் உடைப்பு : வீட்னுள் ஆங்காங்கே தீப்பற்றல் : பீதியில் மக்கள்

Published By: MD.Lucias

23 Mar, 2016 | 03:57 PM
image

வீடு ஒன்றுக்கு அருகில் காணப்பட்ட சூனிய கடவுளுக்குரிய கோவிலை உடைத்தநிலையில், குறித்த கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டினுள் ஆங்காங்கு மர்மமான முறையில் தீப்பற்றுவதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவம் வென்னப்புவ லுனுவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த கோவிலை உடைத்த பின்னரே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் இதனால் பிரதேச மக்கள் பீதியடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தானாபுர பிரதேசத்தில் 7ஏ, இல.109 இல் அமைந்துள்ள கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டின் உரிமையாளர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள் , இந்நிலையில் குறித்த வீட்டை  மற்றுமொரு குடும்பத்தினருக்கு வாடகைக்கு வழங்கியுள்ளனர்.

வாடகைக்கு குடியேரியவர்கள் வீட்டின் அருகில் சூனியக்கடவுளுக்கு சிறிய கோவில் ஒன்றை அமைத்து வழிப்பட்டு வந்துள்ளனர்.

இதனை அவதானித்த வீட்டின் உரிமையாளர் குறித்த கோவில் தமது ஆகமத்துக்கு எதிரானது எனவும் இதனால் கோவிலை உடைக்குமாறும் கோரி பலவந்தமாக உடைத்து அதனை அகற்றியுள்ளார்.

இதனையடுத்தே குறித்த வீட்டினுள்ள இவ்வாறான மர்ம சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நேற்று முன்தினம்  சமைப்பதற்காக அரிசியை கையில் எடுத்த போது அரிசி திடீரென தீப்பற்றிக்கொண்டுள்ளதாகவும் குறித்த வீட்டில் உள்ள பெண் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, ஒரு நாளைக்கு பத்து தடவைகளுக்கு மேல் இவ்வாறு தீப் பற்றிகொள்வதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40