இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய இன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகவுள்ளார்.

அகில தனஞ்சய தனது பந்து வீச்சு முறையை பரிசோதனைக்கு உட்படுத்தவே இன்று அவுஸ்திரேலியாவின் பிரிஸ்போன் நோக்கி பயணமாகவுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிராக காலியில் நடைபெற்ற போட்டியின்போது இவரது பந்து வீச்சில் சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக இவருக்கு 14 நாட்களுக்குள் பரிசோதனை நடத்த வேண்டும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. 

இதன் காரணமாகவே பந்து வீச்சு முறையை பரிசோதனைக்குட்படுத்த அவர் இன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவுள்ளார். 

இந் நிலையில் இங்கிலாந்துடன் இடம்பெறவுள்ள இறுதி டெஸ்ட் போட்டித் தொடரில் அகில தனஞ்சயவுக்குப் பதிலாக இலங்கை அணியில் சுழற் பந்து வீச்சாளர் நிஷாந்த பீரிஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.