ஜோர்ஜியாவில் 2 வயது சிறுவன் பொம்மை என நினைத்து நிஜ துப்பாக்கியுடன் விளையாடிய போது, துப்பாக்கி வெடித்ததால் குறித்த சிறுவன்  பரிதாபமாக உயிரிழந்தார். 

குறித்த சம்பவம் ஜோர்ஜியாவின்  க்ளேடன் கவுண்டி பகுதியி்ல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை  சேர்ந்த 2 வயது சிறுவன், தனது தந்தையின் அறைக்குள் நுழைந்து விளையாடிக் கொண்டிருந்த போது அவரின் தந்தை உறங்கிக் கொண்டிருந்தார். தனது தந்தையின் முகத்தை மூடி விளையாடிய சிறுவன், அவரின் தலையணைக்கு அடியில் இருந்து தந்தையின் துப்பாக்கியை  எடுத்தார்.

பொம்மை துப்பாக்கி என நினைத்த சிறுவன் அதைக் கொண்டு விளையாட ஆரம்பித்த நிலையில் துப்பாக்கி நிரப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென வெடித்தது.  சத்தம் கேட்டு தந்தை உடனடியாக  எழுந்து பார்த்த போது  சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

மற்றோர் அறையில் இருந்த சிறுவனின் தாய் ஓடி வந்தார். இருவரும் அருகில் இருந்த வைத்தியசாலைக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக க்ளேடவுன் கவுண்டி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில். இதில் யார் மீது குற்றம் சுமத்தப்படும் என்று தெரியவில்லை. என பொலிஸார் தெரிவித்துள்ளனர்