HUAWEI Seeds for the Future 2018 செயற்திட்டம் இலங்கையில் இளைஞர், யுவதிகளுக்கு வலுவூட்டுகின்றது

Published By: Digital Desk 4

19 Nov, 2018 | 07:51 PM
image

தொடர்ந்து 3 ஆவது ஆண்டாகவும் இடம்பெறும் HUAWEI Seeds for the Future Program செயற்திட்டத்தினூடமாக இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தொழிற்துறை வலுவூட்டப்பட்டுள்ளது.

 Huawei Seeds For the Future Program Plan - 2018 என்ற செயற்திட்டமானது அண்மையில் Huawei Sri Lanka வாடிக்கையாளர் தீர்வுகள் புத்தாக்க மற்றும் ஒருங்கிணைப்பு அனுபவ மையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொலைதொடர்பாடல்கள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான சூலானந்த பெரேரா மற்றும் கொழும்பிலுள்ள மக்கள் சீனக் குடியரசு தூதரகத்தின் அதிகாரிகள் இதில் கலந்து சிறப்பித்துள்ளனர்.  இச்செயற்திட்டத்தின் மூலமாக இலங்கையிலிருந்து 10 மாணவர்கள் சீனா செல்வதற்கான அனுசரணையை  HUAWEI வழங்கியுள்ளதுடன், அவர்கள் 2018 நவம்பர் 5 முதல் 16 வரை சீனாவில் தங்கியிருப்பர்.

Huawei இன் சர்வதேச அளவிலான பிரதான வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டமாக அமைந்துள்ள  Seeds for the Future ஆனது இலங்கையில் இளைஞர், யுவதிகள் மத்தியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப திறமையை வளர்த்து, இதன் பயன்களை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறைக்கு கிடைக்கச்செய்யும் நோக்குடனேயே முன்னெடுக்கப்படுகின்றது. இச்செயற்திட்டமானது தொடர்ச்சியாக கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. Huawei Sri Lanka பிரதிநிதித்துவ அலுவலகம், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முறையே 10 இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கற்றல் மற்றும் கலாச்சார சுற்றுலாவுக்கு சீனா செல்வதற்கான முழுமையான அனுசரணையை வழங்கியிருந்தது.

டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான சூலானந்த பெரேரா  இந்நிகழ்வில் கருத்து வெளியிடுகையில், “தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் இன்று பல்வேறு பொருளாதாரங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் வளர்ச்சிக்கான முக்கியமான இயந்திரங்களாக மாறியுள்ளன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தொழிற்ப துறையானது வர்த்தக முறைமைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, தகவல்  தொடர்பாடல் தொழில்நுட்ப சூழல்தொகுதியின் மத்தியில் மேற்குறிப்பிட்ட மாற்றத்தினால் எழுந்துள்ள சவால்களை தீர்த்து வைப்பதற்கான தொழில்நுட்ப திறமைகள் கொண்ட ஆளணியினர் பாரிய எண்ணிக்கையில் கொண்டிருப்பது அவசரமான ஒரு தேவையாக காணப்படுகின்றது. 

இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் ஒரு நிறுவனமாக HUAWEI திகழ்வதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தொழிற்துறையின் அபிவிருத்தியை ஊக்குவித்து, எமது நாட்டில் நீண்ட கால அடிப்படையில் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேற்றியலை முன்னெடுத்துச் செல்லும் அதன் இலக்கினையும் நாம் போற்றுகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.

இச்செயற்திட்டத்தின் கீழ், உள்நாட்டு அரசாங்கம்,  உயர் கல்வி ஸ்தாபனங்கள் மற்றும் ஏனைய ஸ்தாபனங்களுடன் HUAWEI கூட்டாக இணைந்து செயற்பட்டு,  திறமைமிக்க பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சார்ந்த திணைக்களங்களில் பணியாற்றும் இளம் அரசாங்க அதிகாரிகளை தெரிவு செய்து 

அவர்கள் தமது அறிவை வளர்த்துபணி அனுபவத்தை மேம்படுத்தி சீன கலாச்சாரம் தொடர்பிலும் ஆழமான விடயங்களை அறியப்பெற்று சர்வதேச வர்த்தகச் சூழலில் கலாச்சாரங்களுக்கு இடையிலான பணி அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்புக்களை அவர்களுக்கு வழங்குகின்றது 5G  LTE  மற்றும் cloud computing போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பினையும் மாணவர்கள் பெற்றுக்கொள்வதுடன் Huawei இன் அதிநவீன ஆய்வுகூடங்களில் நேரடி செய்முறைப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கப்பெறுகின்றன. Huawei பணியாளர்களுடன் அவர்கள் நேரடியாக இடைத்தொடர்பாடல்களை முன்னெடுத்து Huawei ஆய்வுகூடங்களுக்கும் நேரடியாகச் சென்று, அதிநவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் நேரடி செயல்முறை அனுபவங்கள் மற்றும் நேரடி செயல் விளக்கங்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இச்செயற்திட்டத்தின் தனித்துவமாக உள்ளது.

HUAWEI Technologies Lanka (Pvt) Ltd)  நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான  ஷண்லி வாங்  கருத்து வெளியிடுகையி,  “Huawei நிறுவனம் தான் தொழிற்பட்டு வருகின்ற நாடுகளில் நியாயபூர்வமான மற்றும் நிலைபேற்றியல் கொண்ட அபிவிருத்திக்கு உதவுவதற்கான வாய்ப்புக் களை தோற்றுவிப்பதற்காக கல்வியை அடையப்பெறும் வாய்ப்பினை ஏற்படுத்துவது மிகவும்  க்கியமானது என நம்புகின்றது. ஆதலால், எமது சர்வதேச வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு முன்னெடுப்புக்கள் பெரும்பாலும் கல்வி மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை இலக்காகக் கொண்டுள்ளன. 

2008 ஆம் ஆண்டில் Huawei  நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டSeeds for the Future செயற்திட்டமானது உள்நாட்டு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப திறமையை விருத்தி செய்து,  அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்தி,  தொலைதொடர்பாடல்கள் துறையில் மகத்தான புரிந்துணர்வுடன்,  அதன் மீதான ஆர்வத்தை ஊக்குவித்து,  அபிவிருத்தியை மேம்படுத்தி மற்றும் ஊக்குவித்து,  டிஜிட்டல் சமூகத்தின் எதிர்கால திறமைசாலிகளை தீவிரமாக பங்கேற்கச் செய்யும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது,” என்று குறிப்பிட்டார்.

“இலங்கையில் டிஜிட்டல் வளர்ச்சி மாற்றத்திற்கு பங்களித்து, இன்னும் அதிகமான முதலீடுகளை மேற்கொள்வதற்கு Huawei நிறுவனம் ஆர்வத்துடன், தயாராக உள்ளது. ஆகவே, இலங்கையிலுள்ள இளம் தலைமுறையினர் தமது தகவல்  தொடர்பாடல் தொழில்நுட்ப திறமை மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் ‘Huawei Seeds for the Future’ செயற்திட்டத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம்,” என HUAWEI Technologies Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான  ஷண்லி வாங் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாக பங்களித்து ஏனைய பொருளாதாரங்களின் மத்தியில்

போட்டித்திறன் கொண்ட ஒரு நாடாக இலங்கையை மாற்றியமைக்கும் வகையில் இளைஞர், யுவதிகளின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் திறமையை மேம்படுத்துவதற்கு,  தகவல் தொடர்பாடல் தொழிற்துறை மீதான முதலீடுகளை அதிகரிப்பதற்கு இலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் துறை ஆகிய இரு தரப்பினரும் முன்வரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என்றும் ஷண்லி வாங்  பரிந்துரைத்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “ஆண்டுதோறும் ஷென்ழேனில் (Shenzhen)அமைந்துள்ள எமது தலைமையலுவலகத்தில் கற்றுக்கொள்வதற்காக ஒரு நாட்டிலிருந்து 10 பேர் என்ற அடிப்படையில் 1,000 மாணவர்களை Huawei அழைப்பிக்கின்றது. அவர்களின் வாழ்வை மாற்றியமைக்கும் வகையில் தமது அனுபவங்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பினை அவர்களுக்கு வழங்கி, எதிர்கால போக்குகள் தொடர்பில் நாம் அவர்களுடன் கலந்துரையாடுகின்றோம். 

Huawei தொழிற்பட்டு வருகின்ற அனைத்து நாடுகளிலும் திறமைவாய்ந்த இளம் தொழிற்துறையினரை வளர்க்க வேண்டும் என்ற எமது பேரவாவை இச்செயற்திட்டத்தின் தலைப்பு பிரதிபலிக்கின்றது. விரைவாக மாற்றம் கண்டு வருகின்ற தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை எவராலும் நிச்சயமாகக் கூறி விட முடியாது. வேறுபட்ட இனங்கள் மற்றும் மொழிகளைச் சார்ந்த இளம் திறமைசாலிகளை நாம் ஒன்றுதிரட்டி, சர்வதேச வளர்ச்சியில் அவர்கள் தமது பங்களிப்புக்களை வழங்குவதற்கு வழிகோலுகின்றோம். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தொழிற்துறையின் எதிர்கால திறமைகளை வளர்ப்பதில் Huawei தீவிர அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது,” என்று கூறினார்.

இச்செயற்திட்டமானது பல்வேறு நாடுகளின் டிஜிட்டல்மயமாக்க மூலோபாயத்திற்கு அமைவாகவே உள்ளது. தொழிற்துறையின் அபிவிருத்திக்கு முக்கியமான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தொழில்சார் ஆளணியை விருத்தி செய்து, ஒன்றுதிரட்ட இது உதவுவதுடன், அதன் மூலமாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தொழிற்துறையின் வளர்ச்சியை ஊக்குவித்து, பல்வேறு துறைகளின் அபிவிருத்தியை முன்னெடுத்து, நீண்ட கால அடிப்படையில் தொழில்வாய்ப்பின்மை வீதங்களைக் குறைப்பதற்கு பங்களிப்பாற்றுகின்றது. உள்நாட்டு பல்கலைக்கழகங்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் தமது கற்பித்தல் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சித்திறன்களை மேம்படுத்தவும் இச்செயற்திட்டம் உதவுவதுடன்,  மாணவர்களுக்கு உயர் தர கற்கைநெறிகளை வழங்கி, நேரடி நடைமுறை அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களையும் வழங்குகின்றது. 

மாணவர்கள் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்கள் மற்றும் உள்நாட்டுச் சந்தையின் புத்தாக்க தேவைகள் தொடர்பில் கற்றுக்கொள்வதால்,  தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தொழிற்துறைக்கு ஏற்ப தங்களை உள்வாங்கிக் கொள்ளும் தமது ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்கின்றனர். திறன்களை உள்வாங்கிக் கொள்வதன் மூலமாக,  மாணவர்கள் தமது தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள முடிவதுடன்,  தமது தொழில் மற்றும் பல்கலாச்சார வர்த்தக சூழலில் திறமையுடன் செயற்படவும் அவர்களுக்கு உதவுகின்றது.

2016 டிசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு இச்செயற்திட்டமானது உலகளாவில் 96 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை 2,648 பயிற்சியாளர்கள் கல்விச் சுற்றுலாவிற்காக சீனாவிற்கு பயணித்துள்ளனர். 2017 ஆம் ஆண்டில், 40 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 41 மாணவர் குழுக்களை சீனாவுக்கு வரவழைப்பதற்கான திட்டத்தை அது கொண்டிருந்தது. (2017 பெப்ரவரி முற்பகுதி வரையான புள்ளிவிபரங்களுக்கு அமைவானது). Seeds for the Future  செயற்திட்டமானது உள்நாட்டு நிலைமைகளுக்கு ஏற்றதாக வடிவமைப்புச் செய்யக்கூடியதாக உள்ளதுடன், பல்வேறு நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் செயற்படுத்தக்கூடியது. Huawei இது வரையில், 280 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்களுடன் ஒத்துழைத்துள்ளதுடன், அதன் மூலமாக 20,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

நீண்ட கால அடிப்படையில் சர்வதேசரீதியாக இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு Huawei திட்டமிட்டுள்ளதுடன், உள்நாட்டு பங்குடமைகளை வலுப்படுத்தவும் எண்ணியுள்ளது. Seeds for the Future செயற்திட்டத்திற்குப் புறம்பாக, சிறப்பான  பெறுபேறுகளை ஈட்டும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் Huawei இன் உள்நாட்டு பிரதிநிதித்துவ அலுவலகங்களில் உள்ளகப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்குதல், உள்நாட்டு தொழில் சார்ந்தவர்களை வளர்க்க உதவுவதற்காக உள்நாட்டு பயிற்சி மையங்களை நிறுவுதல் அல்லது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பயிற்சி செயற்திட்டங்களை வழங்குதல், உள்நாட்டு பல்கலைக்கழங்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உபகரணங்களை அல்லது ஆய்வுகூடங்களை நன்கொடையளித்தல் மற்றும் தொழில்நுட்ப பாடநெறிகளை வழங்குதல், ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறிகள், தகைமை மதிப்பீடுகள்? Huawei அங்கீகாரம் பெற்ற வலையமைப்பு அக்கடமியின் ஊடாக தொழில் சான்று அங்கீகாரங்களை வழங்குதல் போன்ற ஏனைய பல செயற்பாடுகளிலும் Huawei ஈடுபட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57
news-image

யாழில் முதல் முறையாக மருந்து வில்லைகள்...

2024-03-11 16:16:39
news-image

KIST தனது சோஸ் வகைகளை புதிய...

2024-03-08 10:44:09
news-image

முன்னேற்றத்தின் பங்காளியாக 135 ஆண்டுகால பெருமை...

2024-03-06 17:32:13
news-image

பிரீமியம் அந்தஸ்தை பெற்றுள்ள Radisson Hotel...

2024-03-04 16:26:08
news-image

பான் ஏசியா வங்கி 2023 நிதியாண்டில்...

2024-02-26 16:45:55
news-image

புரத தினம் 2024: இவ்வருடத்தின் எண்ணக்கரு...

2024-02-26 16:58:38
news-image

Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட...

2024-02-26 16:58:18