(எம்.மனோசித்ரா)

சிறிகொத்தாவின் சபாநாயகராக செயற்படும் கருஜயசூரிய பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்துக்கொண்டிருகின்றார். அவர் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவை இரண்டில் ஒன்றேனும் இடம்பெறாவிட்டால் இந்த நெருக்கடி நிலைமையே தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகரமான விஜேவீரவினுடைய கொள்கைகளை பாதுகாக்க வேண்டிய மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று அவரது கொள்கைகளை மறந்து ரணில் விக்ரமசிங்கவினுடைய கொள்கைகளை பின்பற்றி செயற்பட்டு வருகின்றனர் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.