வவுனியா நகரசபை சுகாதார தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பு

Published By: R. Kalaichelvan

19 Nov, 2018 | 02:35 PM
image

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வுவனியா நகரசபை பொது சுகாதார ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்  இன்றுக்காலை  ஈடுபட்டனர்.  இலங்கைதேசியஅரச  பொது ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் நகரசபையின் சில சுகாதாரத்தொழிலாளர்கள்பங்கேற்காது நகரசபை வளாகத்தில் இருந்து கடமைக்காக வாகனங்களை எடுத்து செல்லமுற்பட்டபோது      பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் வாகனங்களை வெளியில் கொண்டு செல்லமுடியாதவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைஅடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைதந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் நகரசபை தலைவர்செயலாளர் உடன்கலந்துரையாடியதுடன்    இதற்கானசரியான தீர்வை நாளை நகரசபைதரும் என்ற உறுதி மொழியை பொலிஸார் தெரிவித்ததையடுத்துஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

சம்பள மறுசீரமைப்பானது அரசநிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக செய்யப்படவேண்டும். உள்ளக வெற்றிடங்கள் அந்த வேலைப்பகுதியில்  வேலை செய்யும்ஊழியர்களை கொண்டு நிரப்பப்படவேண்டும்.

தனியார்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட காவல் கடமைகளை நிறுத்தி எமது ஊழியர்கள் பதவி உயர்வாக அதனை வழங்கவேண்டும் சுகாதாரதொழிலாளர்களுக்காக இடம் மற்றும் மலசலகூடம் அமைத்துதர வேண்டும் வவுனியா நகரசபையில் மூன்று இலட்சம் பெறுமதியானமரங்கள் கடத்தப்பட்டமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கையை முன்வைத்தே இவ்வார்ப்பாட்டத்தில்  ஈடுபட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09