எலிக்காய்ச்சல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் தற்போதுவரை 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் எம். சரீட் தெரிவித்துள்ளார்.

இக்காய்ச்சலானது, பொல்பிட்டிகம, ரிதீகம மற்றும் மஹவ முதலான பகுதிகளில் 187 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் . மேலும், இலேசான காய்ச்சல் தொடர்ந்தும் நீடித்தால் கண்டிப்பாக வைத்தியரை நாடி, உரியவகையில் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் எலிக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.