(இரோஷா வேலு) 

அசலக கொலொங்கொட பிரதேசத்தில் புதையல் தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்த மூவர் நேற்று புதையல் தோண்டப் பயன்படுத்திய பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவத்தின் போது கொலொங்கொடை மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்த 44,49 மற்றும் 20 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரையும் இன்றைய தினம் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளளனர்.

மேலம் சம்பவம் தொடர்பில் அசலக பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.