யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் கொழும்புக் கிளை பழையமாணவர்களால் கல்லூரிதினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

புனித பத்திரிசியார் கல்லூரி தினத்தை முன்னிட்டு பம்பலப்பிட்டி, கிளிபோர்ட் பிளேஸில் அமைந்துள்ள சிற்றாலையத்தில் அருட்தந்தை சாந்திக்குமார் தலைமையில் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கொழும்புக் கிளையின் பழைய மாணவர்கள் பங்குபற்றியதுடன்  திருப்பலி பூசையையடுத்து இராப்போசன நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.