6 வருடங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட பிகாசோ ஓவியம் 

Published By: R. Kalaichelvan

19 Nov, 2018 | 11:45 AM
image

நெதர்லாந்து நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் கடந்து 2012 ஆம்  ஆண்டு திருடப்பட்ட  பிகாசோ ஓவியம் 6 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.உலகப் புகழ் பெற்ற ஓவியரான பிகாசோவின் ஓவியங்கள் பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

எனினும் நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் குன்ஸ்தல் அருங்காட்சியகத்தில் வைத்து குறித்த 7 ஓவியங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளது.

அதனை தொடர்ந்து புகழ்பெற்ற இவ் ஓவியங்களை கண்டு பிடிப்பதற்கு தனி குழு ஒன்று அமைக்கபட்டு தேடுதல் பணி இடம்பெற்றது.

ஓவியங்களை திருடிய வழக்கில் தொடர்புடைய ருமேனியர்கள் கைது செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. 

ஆனால் திருட்டுபோன ஓவியங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்நிலையில், திருட்டு போன ஓவியங்களில் ஒரு ஓவியம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ருமேனியாவின் துல்சியா கவுண்டியில்  நேற்றைய முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நெதர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளரான மீரா பெட்டிகு என்பவர் இதனை கண்டுபிடித்து புசாரெஸ்டில் உள்ள நெதர்லாந்து தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார். 

அதன் மதிப்பு 9 லட்சத்து 5 ஆயிரம் டாலர்கள் ஆகும்.

தற்போது ருமேனிய அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ள அந்த ஓவியம், பிகாசோவின் ஓவியம்தானா? என உறுதிப்படுத்தப்பட்டபிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47