சிஐடி அதிகாரி இடமாற்றம்- ஐதேக கண்டனம்

Published By: Rajeeban

19 Nov, 2018 | 10:56 AM
image

மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிரவிசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை பாராதூரமன விடயம் என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ  தெரிவித்துள்ளார்.

பல குற்றச்செயல்கள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்திய நிசாந்த சில்வாவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை பாரிய தவறு என தெரிவித்துள்ள ஹரீன் பெர்ணான்டே இது குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

நிசாந்த சில்வா போன்ற திறமையான உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்படுவது கவலைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்பெரேரா பொலிஸ் திணைக்களம் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜெயசுந்தர இவ்வாறான சட்டவிரோத உத்தரவுகளை ஏற்று தனது அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்து வெட்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தரப்பினர் திறமையான அதிகாரிகளை இடமாற்றுவதற்காகவா அரசாங்கத்தை கைப்பற்றினார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02