பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களையடுத்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விமான நிலையத்தின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கையாக இருக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.