நாட்டின் ஸ்திரமற்ற நிலைக்கு ஜனாதிபதியே காரணம் - ஜே.வி.பி.

Published By: Vishnu

18 Nov, 2018 | 08:29 PM
image

(ஆர்.யசி)

ஜனாதிபதி தலைமையில் கூடிய சர்வ கட்சி கூட்டத்தை புறக்கணித்த மக்கள் விடுதலை முன்னணி, மக்களின் இறையாண்மையை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறப்படும் பாராளுமன்றத்தில் கடந்த மூன்று  பாராளுமன்ற அமர்வு நாட்கள் இடம்பெற்ற மோதல் மற்றும் அவமதிப்புச் செயற்பாட்டு  நிலைமைக்கும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலைமைக்கும் முழு பொறுப்பும் ஜனாதிபதியும் அவரது  தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுமே காரணம் என சுட்டிக்கட்டியுள்ளது. 

சர்வ கட்சி கூட்டத்தை புறக்கணித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

தங்களுடைய செயலாளரினால் 2018.11.17 அன்று அனுப்பப்பட்ட கடிதத்தில் உங்களுடனான பேச்சுவார்த்தைக்கு வருமாறு எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கீழ் வரும் விடயங்களை உங்களின் அவதானத்திற்கு கொண்டு வர வேண்டுமென நாங்கள் எண்ணுகின்றோம்.  

பாராளுமன்றத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக கலந்துரையாடுவதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கமாக உள்ளதாக அறிவித்துள்ளீர்கள். 

எனினும்  பாராளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் அனைத்துமே  உங்களின் சூழ்ச்சிகரமான அரசியல் நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகவும், இந்த காரணிகளை   அடிப்படையாக கொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மையின் பிரதிபலிப்பாகவே நான் பார்க்கின்றோம். 

தற்போது நாட்டில் பாரதூரமான வகையில் அரசியல்  ஸ்திரமற்ற நிலைமை உருவாகியுள்ளது. 7 தாசாப்தங்களுக்கும் அதிகமான இலங்கை அரசியலில் இது போன்றதொரு நிலைமை முதற் தடவையாகவே உருவாகியுள்ளது எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20