மஹிந்த ராஜபக்ஷவுக்கும், புதிய அமைச்சரவைக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 113 பேர் கையொப்பமிட்டு எமது பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஜனாதிபதியிடம் சவால் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வ கட்சி சந்திப்பின்போதே அவர் ஜனாதிபதியிடம் இந்த சவாலை விடுத்துள்ளார்.

மேலும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவா 113 பேர் கையொப்பமிட்ட கடிதத்தினை நாளை காலை ஜனாதிபதியிடம் கையளிக்கத் தயார் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.