(நா.தினுஷா) 

நாட்டின் பிரதமர் யார் என்பதை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னனியே தீர்மானிக்கும். அவ்வாறே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் உரிமை எவருக்கும் இல்லை. 

ஐக்கிய தேசிய முன்னியின் சார்பில் பிரதமர் பதவிக்கு யாரை தெரிவு செய்வதென்பதையும் முன்னனியின் உறுப்பினர்களே  தீர்மானிப்பார்கள் என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் அடிமைப்படாமல் சுயாதீனமாக இயங்கும் கட்சி என்றவகையில் கட்சி நடவடிக்கைகளை ஐக்கிய முன்னனியின் உறுப்பினர்களை தவிர வேறு எவறுக்கும் பகிர்ந்தளிக்க விரும்பமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி அலரிமாளிகையில் இன்று ஏற்பாடு செய்திருந்து ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.