(இரோஷா வேலு) 

6,9 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட பெண் உட்பட நான்கு பேரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலயைத்தில் வைத்து சுங்க போதைத்  தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.  

நாத்தாண்டியச் சேர்ந்த 31,36,40 மற்றும் 49 வயதுகளையுடைய நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 690 சிகரெட் பெட்டிகளில் அடங்கிய ஒரு இலட்சத்து 38 ஆயிரம் சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 

டுபாயிலிருந்து இன்று காலை 6.30 மணியளவில் இலங்கை வந்த விமானத்தில் வந்திரங்கிய பெண்ணொருவர் உட்பட நால்வரும் சட்டவிரோதமான முறையில் தமது பயணப்பொதியில் மறைத்து வைத்து சிகரெட்டுகளை கடத்த முயற்சிக்கையிலேயே விமான நிலைய சுங்க போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.