மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட 2ஆம் வீதியில் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு சொந்தமான காணியை தனியார் ஒருவர் அத்துமீறி சுவீகரித்துள்ளதாக பாடசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.இந்த குறித்தது  மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகம் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்கமும் கண்டும் காணாமல் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆகவே இதற்கான தீர்வை உரிய அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.